சிறையா
--------------
உங்களுடையது என்று
நீங்கள்
உரைப்பவை எல்லாம்
உங்களுடையவை அல்ல,
அதிலும்
உங்கள் பிள்ளைகள்
நிச்சயமாய்
உங்களுடையவை அல்ல,
அவை
உலகின் பிள்ளைகள்,
உலக வாழ்வின் பிள்ளைகள்-
உங்கள் வழியே
வந்திருந்தால் கூட…!
உடல்கள்
உங்கள் வீட்டில்
உங்கள் கூடவே இருக்கலாம்,
அவற்றில்
உள்ள எண்ணங்கள் இருப்பதில்லை
உங்களுடனே,
உள்ளன அவை நாளை உலகில்-
அது
உங்களுக்குப் பிடிபடாது,
அதனால்
சுயமாய்ச் சிந்திக்க விடுங்கள்
சிறுசுகளை,
சிறைப்படுத்தவேண்டாம் சிந்தனையை
உறவுகளைக் காட்டி…!
அழிந்தாலும்…
கோலங்கள்
அழியத்தான் செய்யும்
காலில் பட்டு,
அழியுமென்று தெரிந்தே
அழகாய்ப் படைக்கிறோமே
அதுதான் கலை,
அதற்கு இல்லை விலை…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-01
அழியத்தான் செய்யும் ..
படைப்புகள் யாவும்
நடைபயின்று உலாவும்;
இடையறா உழைப்பே
தடையிறாது உயர்த்தும்.
நன்றி.
வை. அண்ணாஸாமி