அப்பா..! ஆழ்ந்த அர்த்தம்
------------------------------
அம்மாவின் அழுகை
உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது!
அண்ணன்மார் வருகையால்
எழுந்த சத்தம் வானைகிழித்தது!
மரணவலி அறிந்திராத எங்கள்
வீட்டு மழலைகள் திக்குமுக்காடினர்!
சந்தோஷத்தை மட்டுமே பார்த்திருந்த
எனது விழிகள் நீரோடையாய் பாய்ந்தது!
சத்தம் போட்டு சிரிப்பலைகள் கேட்ட வீடு
சாவு மேளங்களின் சத்தங்களால் முழங்கின!
சொந்தங்களால் வீட்டின் வாசல்வரை
நிரம்பி வழிந்தது!
சாவு செய்தி கேட்டு வந்தார்களாம்?
அட கடவுளே..!!
எங்கள் வீட்டு முற்றத்தில்..?
எனது அப்பாவின் சடலம்..!!
நெஞ்சில் நெருப்புடனும்
கண்களில் நீருடனும்
உதடுகளில் வெம்பல்களுடனும்
அனுப்பிவைத்தோம் அப்பாவை.!
எங்கள் வீட்டு தெய்வத்தை..!!
-நவா நடா
- நவா நடா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-18