பொறாமை.. தேடல்.. கருவறை
01.
பொறாமை
-------------
உன்னிடம் ஓயாமல் பேசும்
என் இதயத்தின் மீது பொறாமை
என் இதழ்களுக்கு......
02.
தேடல்
---------
தேடல்
என் கண்களுக்கு மட்டும் அல்ல
உன் கால் தடம் தேடும்
என் பாதங்களுக்கும் தான்...
03.
கருவறை
-------------
உன்னை நினைத்த மாத்திரத்தில்
நான் கற்பவதி ஆனேன்
என் இதய கருவறையில்
ஜீவனாய் நீ உதித்தாய் வளர்ந்தாய்
பேறுகாலம் அற்று......
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-15