Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மண்டலத்தில் ஒரு நாடு

- நவஜோதி ஜோகரட்னம்

மண்டலத்தில் ஒரு நாடு
-------------------------------

நாம் சிரித்த காலமுமிருந்தன
நம்முறவுகள் நசுக்கப்பட்டு
இப்போ
சிரிப்புக்களும் கலகலப்புக்களும்
தலைமறைவாகிய வாழ்க்கை
இரும்பு
உருக்கு
நெருப்பு
அழிப்பு
எரிப்பு
கண்ணீர் வடிவிலே என்னுடைய தேசம்
ஆடுகள் மாடுகள்
மேய்வது மேய்ச்சல் நிலம்
அங்கே
மனிதமிருகங்களாக
நிலத்துக்கடியில் புதைந்து கிடந்த எம்மக்கள்…
வகை வகையான அழுகைகள்
வதைவிட அறையிலிருந்து…
எங்கள் குழந்தைகளிடமிருந்து…
எங்கள் அம்மாவிடமிருந்து…
எங்கள் அக்காவிடமிருந்து…
மின் வேலி முகாம்களுக்குள்
பலமுறை அவர்கள் இறந்து பிறக்கலாம்
ஓடோடி அவர்கள் உருக்குலைந்து போகலாம்
தட்டிக் கேட்காமல் அவர்கள்
மௌனித்து மாளலாம்
கட்டிளங்காளையும்
பெட்டைக் குருவிகளும்
முட்கம்பி வேலியுள்ளும்
தெருவிலும் உறங்கலாம்
புரியவில்லை
உரிமைகளைப் பறித்து
பூட்டாது உறங்கும் இரவுகளில்
பெண்டாட்டியாகும் விசித்திரம்!
சோகம் நிறைந்த தேசப்படத்தின்
மனிதர்கள் நிலத்தை
ராணுவம் எடுக்கலாம்
உலக மக்களே கூறுங்கள்!
மண்ணிலே இலங்கைபோல் நாடு
மண்டலத்தில் கண்டதுண்டோ!

31.7.2009.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வாழ்வும் ஒரு காதல
  • கசக்கின்றது காலம்
  • பெண்
  • கலங்கும் பார்வைகள்
  • இந்த நிஜமான உணர்வு
  • மௌனத்தை மறுக்கும் நட்சத்திரம்
  • அந்தநாள் கதாநாயகன்
  • மீண்டும் பிறப்போம்
  • கத்துகிறது என் கவிதை
  • சதா மௌனம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube