கதவு
---------
உங்கள் வருகைக்காய்த்
திறந்து வைக்கப்பட்ட கதவு
நீங்கள் வந்தவேளை
சாத்தப்பட்டிருந்தது கண்டு
திரும்பியதறிந்தேன்
திறக்கவும் மூடவும்
மற்றும்
பாதுகாப்புக்குமானவை
கதவுகள் என்பதை
நீங்கள் உணர மறுத்தது
உறுத்துகிறதெனக்கு
குரல் வழங்கப்பட்டிருப்பது
கூப்பிடுவதற்கும்
கைகள் தரப்பட்டிருப்பது
தட்டிப் பார்ப்பதற்கும்தான்
உள்ளே தாழிடப்பட்ட
தட்டினால் திறக்கப்படாத
கதவுகளேதும்
உலகத்தில் கிடையாது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02
கதவுகளேதும்
உலகத்தில் கிடையாது "
அன்றாட வாழ்க்கையில் தட்டினால் திறக்கப்படாத கதவுகள் தான் நிறையவே இருக்கின்றன
பாரதிமோகன்
kalaisolai.blogspot.com