Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஊரறிய உலகறிய.. அரைக்கணமும்

- புலவர் சா இராமாநுசம்

ஊரறிய உலகறிய உண்மை தன்னை.. அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்

01.
ஊரறிய உலகறிய உண்மை தன்னை
-----------------------------------------------

ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும் உணராது இருத்தல் என்னை
பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா
தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே

ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்



02.
அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்
---------------------------------------------------

நானில்லை நீயெனக் கில்லை என்றால்-மேலும்
நலிந்துவிடும் நம்வாழ்வே பிரிந்துச் சென்றால்
வீணில்லை என்வார்த்தை நம்பு என்றீர்-என்
வேதனையை குறைத்தேதான் நீரும் சென்றீர்
ஏனில்லை சென்றபின்னர் அத்தான் நெஞ்சில்-அந்த
எண்ணம்தான் தினம்வாட்ட அறியேன் துஞ்சல்
தேனில்லை என்றுமலர் பலவே நாளும்-தேடித்
திரிகின்ற வண்டெனவே ஆனீர் போலும்

தாக்கவரும் புலிகூட பெண்ணைக் கண்டே-சற்று
தயங்குமெனச் சொல்லுகின்ற கதைகள் உண்டே
காக்கவொரு ஆளில்லை பெண்ணை என்றால் – அவர்
கற்பென்ன கடைச்சரக்கா தெருவில் சென்றால்
நோக்குகின்ற தன்மையெல்லாம் பழுதே அத்தான்-அதை
நோக்கிபல நாள்முழுதும் அழுதேன் அத்தான்
ஆக்கிவைத்த சோறாக இந்த ஊரே-என்னை
அள்ளிஉண்ண பார்க்கிறது வருவீர் நீரே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-06-06


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பட்டக் காலிலே படுமென் பார்
  • நட்பு

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube