பிறந்த நாட்பரிசு.. ஒரு நிறுவல்..
01.
பிறந்த நாட்பரிசு
---------------------
நான் அல்லாத
எனக்காகவும்
நீ அல்லாத
உனக்காகவும்
இது…
இன்று
பூவின்
பிறந்த நாள் -
அதனால் தான்
எங்கும்
வாசம் !
உன்
சோகங்களெல்லாம்
மறைய வேண்டும்.
ஆனந்தம் உன்
சொந்தமாக வேண்டும்.
உனது
ஆசைகள்
நிறைவேற வேண்டும்
நிறைவாக
நீ
வாழ வேண்டும்.
இன்று
பூவின்
பிறந்த நாள் -
எங்கும் வாசம்!
நீ நடந்து போகும்
சாலை எங்கும்
பூஞ்சோலை
உருவாகும்.
நீ –
வாசம் வீசும் மாலை
பாசம் காட்டும் பாவை
வண்ண வண்ண
வன்னங்களில்
ஓர் ஓவியம்
உனக்காய் !
உன்
கருணைக் கடலில்
மூழ்கினேன் -
என்னை நான்
கண்டு பிடித்தேன்.
இறுதி வரைக்கும்
அழியாத அன்பு –
இது உனக்கான
எனது பரிசு.
02.
ஒரு நிறுவல்
--------------------
புனிதஸ்தளத்தில்
நீ நிற்கின்றாயென்றால்
நிச்சயமாக நீயொரு
பரிசுத்தவானே
ஆனால் யாரோ உன்னை
பாவியாக்கும் பொழுது
நீ எவ்வாறு
பரிசுத்தவானாவாய்..?
ஆகவே
நீ நிற்குமிடம்
புனிதஸ்தளமே அல்ல!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-30