நானும் வாழாவெட்டி
-------------------------
நடப்பன ஊர்வன பறப்பன
நகர்வன அனைத்துமே
நீ உண்பாய் என்று சொன்னாயடா
என் மனதையும் உண்டாய்
சொல்லாமலே
நீ பேசிக் கொண்டிருந்தாய்
நான் மௌனம் சாதித்தேன்
இடையில் எப்படி உன் உயிர்
அனுப்பிய தூதஞ்சல்
என் விழிக்கு எப்படி கிடைத்தது
அது ரகசியம்
நீ வாழ்க்கையை தொலைத்தேன்
என்று சொன்ன அந்த
வார்த்தையில் தான்
நானும்
வாழ்க்கையை தொலைத்தேன்
எனக்கு பிடித்த
எதுவுமே உனக்கு பிடிக்காது
உனக்கு பிடித்தது போலே
நடக்க என்னால் இயலாது
இருந்தும் ஒரு பிடித்தம்
இருந்தது உன் மேல்
விரசம் இல்லா பார்வை
விரல் பிடித்த விதம்
விட்டுக் கொடுக்கும் வார்த்தை
வெந்தணலாய் அளித்த காவல்
இதை விட என்ன வேண்டும்
ஒரு பெண்ணுக்கு ?
இந்த உணர்வு
என் வயது கோளாறு
என்று சொல்லி
ஒதுக்கிவிட
உனக்கு ஒன்றும்
அவ்வளவு வயதாகி விடவில்லை
இந்த
நொடி
நானும் வாழாவெட்டி தான்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-10-02