Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கைவிடப்பட்டவள்

- நிந்தவூர் ஷிப்லி

கைவிடப்பட்டவள்
-------------------------

எல்லோராலும்
எல்லாவற்றாலும்
கைவிடப்பட்டவளை
நேற்று மாலை
சந்தித்த போதுதான்
வாழ்க்கையின்
சில இருண்ட பக்கங்களை கண்டு கொண்டேன்..

கவிதைகள் பற்றிய அவளது
கேள்விகளின் வழியே தொடங்கிய
எங்கள் சம்பாஷணை அவள்
கனவுகள் பற்றிய வேள்விகள்
வரை தொடர்ந்தன..

முல்லைத்தீவில் பிறந்தவள்..
ஒரு பின்னிரவில் செல் விழுந்த சம்பவத்தில்
உறவுகளை இழந்தவள்..
தன்னை விட பலமடங்கு வயதொத்த ஒருவனால் (அ) பலரால்
மிக நீண்ட நேரம் கற்.............ழிக்கப்பட்டவள்..
வாழ்க்கையின் அர்தத்தை பத்தாவது வயதில் தொலைத்தவள்..
போராட்டங்களால் தன்னை தானே சிதைத்தவள்..

கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த என்னை
பைத்தியக்காரன் என்று கூட நினைத்திருப்பாள்..
வாழ்க்கையின் கனதியான கணங்களை கடந்து வந்தவளுக்கு
கவிதைகளின் அவசியம் அநாவசியமாகவே தோன்றியிருக்கும்..

உன் வாழ்க்கை பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்றேன்..
சிரித்தாள் சிரித்தாள் சிரித்தாள்.. சத்தமாக சிரித்தாள்..
"உன் கவிதைகளால் எனது இழப்புக்களை மீட்டு தர ஒண்ணுமா?"
என்ற அவளது கேள்வி என்னை சிலுவையில் அறைந்தது..

பெற்றோரை
உறவினரை
சகோதரரை
கற்பை
காதலை
ஊரை
நிம்மதியை
வாழ்வை
இன்னும்
எல்லாவற்றையும்
இழந்த ஒருத்தியைநீங்கள் எப்போதேனும் சந்தித்தால்
மட்டுமே அதனதன் வலிகளையும் ரணங்களையும்
உணர்வீர்கள்..

அவளது இழப்புக்களை வார்த்தையாக்க முடியாமல்
முதன் முறை கவிதையிடம் தோற்றுப்போகிறேன் நான்..

இதற்கு மேல் எழுத கண்ணீரைத்தவிர
என்னிடம் வேறு மொழிகள் இல்லை..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-10-02


கந்தையா சோதிதாஸ்

15 years 1 month ago

அவளது இழப்புக்களை வார்த்தையாக்க முடியாமல் rnமுதன் முறை கவிதையிடம் தோற்றுப்போகிறேன் நான்..என்பதன் முலம் அப்பெண்ணின் முழுத்துயரத்தையும் வாசகனிடம் இறக்கி விடுகிறீர்கள் கவிதை வாசித்து நீண்டநேரத்திற்கு பின்னும் எல்லாம் இழந்த அப்பெண்ணின்துயரம் மனதோடு வருகிறது.-வேலணையூர்தாஸ் rn

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஏமாற்றங்களின் நெடும் பயணம்
  • இன்னொரு பிரிவை நோக்கி…….
  • நான் ஒரு காமுகன்
  • இந்த மெல்லிய இரவில்
  • யாரிடம் போய்ச்சொல்லி அழ..
  • அடக்குமுறை அறுத்தெறிவோம்
  • உன் போலில்லை.. முதிர்க்கன்னி
  • விலையேற்றமும் தடுமாற்றமும்
  • தொலைதூர அழுகுரல்
  • என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube