Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கனவிலே வாழ்தல்.. கனவுலகில்

- வேலணையூர்-தாஸ்.

கனவிலே வாழ்தல்.. கனவுலகில் காத்திருக்கிறேன்

01.
கனவிலே வாழ்தல்
-------------------------

நிலவொளியில் பனைவெளியில்
நீண்ட மணற்பரப்பில் காலாற நடப்பதாய்
நண்பருடன்
கவிதை கதை இலக்கியம்
மனம் நிறைய பேசி மகிழ்ந்து களிப்பதாய்.
பொங்கும் கடலலை குளித்து
கடல்நுரை அள்ளி களித்து
துய காற்றிழுத்து நுரையீரல் நிரப்பி
சுதந்திரமாய் பறப்பதாய்
எங்கும் மலர்ந்த முகமாய் நட்பொடு பேசி
ஆண் பெண் சமநீதி அமர்ந்த தேசத்தில்
அன்பொன்றே மொழியாய் அமைந்த வெளியொன்றில்
இன்புற்றிருப்பதாய்.
போட்டி பொறாமை வஞ்சகம் தான் நீங்கி
புத்தம் புதிதாய் பூமியிலே பிறப்பதாய்
என்னுள்ளே அடிக்கடி கனவு வரும்
அந்த நிமிடம் மனது குது கலிக்கும்
ஆனந்தம மேலோங்கி உயிர் பறக்கும்.
மீண்டும் விழிப்புவரும்.
நான்கு சுவருள் அகப்பட்டு
நுரையீரல் காற்றுக்காய் ஏங்கும்
எழுந்த அவசரத்தில் உயிர் இயங்கும்
நகர வாழ்வில்
இயந்திர வாழ்க்கையில்
மகிழ்ச்சி தொலைத்த ஜடமாய்...


02.
கனவுலகில் காத்திருக்கிறேன்
--------------------------------------

உன் நினைவு நெருப்பில்
தகிக்கிறது நெஞ்சம்
பனியிலும் வேர்க்கிறது
பாவை மேனி
நிலவும் சுடுகிறது
நீ அருகில் இல்லாமல்
பாலும் கசக்கிறது
உன் பார்வை பருகாமல்
மனமெங்கும் குளிர் நிறைக்கும்
உன் புன்னகையில் தோயாமல்
நீர் இன்றி வாடும் பூச் செடியாய்
நீர் இன்றி துவள்கிறது மனது
விழி வாசல் முடி
கனவுலகில் காத்திருக்கிறேன்
கனவிலாது வந்து
என் காதலுக்கு நீர் ஊற்று
கனவில் உன் முகம் கண்டு மகிழ்கிறேன்
கருகும் என் உயிர் மீட்கிறேன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-07-04


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • விழியில் விரியும்.. விலகி நடந்தது
  • இனி எப்படி இக்கவிதையை
  • அழகு மணல்.. முகமிழத்தல்
  • புலம்பெயர் பிரிவு
  • காலம் அவளை.. மழையில் நனையாமல்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube