வதையின் மொழி
---------------------
வதைபடும்
மொழியொன்றின்
வார்த்தைகள்
மரணதண்டனைத்
தீர்ப்பில்
மருண்டு போனது
ஆயினும்
இன்னும் மரணமின்றி
வதைபடுவதையே
சொல் கொண்ட
விதியாகி
மரண தண்டனைக்
காலம்
நீண்டு கொண்டே
செல்கின்றது!
வதைபடுவதே
விதியாகி
விடையின்றி
நதியோடு கலந்து
கடலோடு சேர்வதோ
வதையின் மொழி?
- வேந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-01-01