ஏன் இந்த பாராமுகம்?. வறுமை.. விதி
01.
ஏன் இந்த பாராமுகம்?
--------------------------
டில்லிப் பெண்ணுக்காக
குரல் கொடுப்பவர்கள்
ஈழப் பெண்களை
மறந்தது ஏன்?
கற்பிலும் ஏன் இந்த
பாரபட்சம்
ஒரு சிப்பாயின் தலைக்காக
போராடும் பாரதம்
ஈழப் படுகொலையை
பார்த்து இரசித்தது ஏன்?
அழுத்தம் என் பெயரில்
இலங்கைக்கு முத்தம் கொடுக்கும்
இந்தியாவை இனியும் நம்பினால்
ஈழத் தமிழருக்கு விடிவு கிட்டுமா?
02.
வறுமை
--------------
குங்குமம் வாங்குவதற்கு
வழியில்லாததால் மனைவி
திருநீறு அணிகின்றாள்
ஐயோ! இறைவா
கணவன் வாழும்போதே அவள்
விதவையாய் காட்சியளிப்பது
ஏன்?
கடவுளே! அவளை
விதவையாக்கிய வறுமைக்கு
வாழ்க்கைச் சட்டத்தில்
என்ன தண்டனை?
03.
விதி
----------
மரணத்துடன் போராடும்
கணவனின் உயிரைக் காக்க
மருத்துவச் செலவுக்காக
மடிப்பிச்சை கேட்கும்
மங்கையைக்கூட விலை
மாதுவாக்கின்றது விதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01