இசையாக
******
ஒடிந்த வலியினையும்
தீக்கோலிட்ட
புண்ணினது ரணத்தையும்
காற்றினூடே
சொல்லிச் சொல்லி
அழுகிறது
புல்லாங்குழல்
- ப்ரியன்.
அய்யனார்
*********
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக்
கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்
- ப்ரியன்
- ப்ரியன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-09-17