அக்கறை நட்பு
வளர வளர வெட்டுகிறான்
என் நண்பன்
ஒரு நிலையில் நான் முடிந்திடாதிட
என் வளர்ச்சியை துரிதப்படுத்த
அக்கறையின் வெளிப்பாட்டால்
அடியோடு பிடிங்கிடாமல்
அளவோடு வெட்டுகிறான்
மலர்சியுடன்
என் வளர்ச்சி வேண்டி
நகமும் சதையுமாய்
தொடர்கிறது
எங்களின் நட்பு!
கவிதை: பாண்டித்துரை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-05-20