முதிர் கன்னி
உயிர் பெற்ற
என் ஜன்னல் கம்பிகளே
என்
உணர்வு சுமக்கும்
நாட்குறிப்பேடுகளே
என்
முக மஞ்சள் கரைத்த
அடிவான மேகமே
என்
கண்ணீரை வெல்ல
கரைந்தொழுகும்
மழைத் துளிகளே
எதிர் பார்த்தே
நிரப்பப்பட்ட நாட்கள்
இன்றும் வெறுமையாகவே
என் மனதுக்குள்
மட்டும் தென்னோலை
ஊடே நீண்டு வரும்
ஒளிக்கீற்றாய்
ஆயிரம்
ஏக்கக்கீற்றுக்கள்
யாருக்கு புரியப்போகிறார்கள்
முதிர் கன்னி மௌனத்தின்
முதல் நரையை.
-- கோகுலன்
ஈழம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-25