Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பயணங்கள் முடியட்டும்

- கவிதா. நோர்வே

பயணங்கள் முடியட்டும்
----------------------------

இரு பத்து வருடங்கள்
முன்னாலே...

சேறு மிதித்து
ஏறிய கப்பலும்
கொட்டும் மழையில்
நனைந்து போன
என் புட்டுப் பொட்டலமும்

நூற்றில் ஒன்றாய்
பாம்பு பயத்தி;ல்
அத்தையொடு ஒட்டிப்படுத்த
பழையதொரு மண்டபமும்

நீண்டதொரு கடல் பயணமும்...

நான் முதலில்
இருக்க மறுத்த
மண்குடிசையும்...

ஒற்றைத் தண்டவாளம்
பக்கமாய் நின்ற ஒற்றை மரமும்
குத்தித் தின்ற
பழத்தின் விதையும்

எனக்கே எனக்காய் இருந்த
அந்த நீலச் சட்டையும்
பச்சைப் பாவாடையும்

பெரிய மீசையோடு
குடிசை வந்து போன
போலீஸ் மாமாவும்.

நினைவுகள் இன்னும்
தொலைக்கவில்லை.

பத்து பைசா இன்றி
வாங்காத பரீட்சைக்குத்தாளுக்கு
விழுந்த அறையும் -அந்த
தாமரைச்செல்வி ரீச்சரும்

சுற்றி இருந்த பக்கத்து
அன்ரி அங்கிள் எல்லாரும்
என்னை அகதி என்று சொன்னதையும்...

அப்பா சவுதியில்
என்றும் சொல்லும்
அம்மாவின் பச்சைப் பொய்களும்
அப்பாவின் மரணம் பற்றி
அறிந்த ராத்திரிப் பொழுதும்
கிணற்றுக்கட்டும்.
உண்மை சொன்ன
சிவப்புச் சட்டை சினேகிதியும்

இதயத்தில் விழுந்த அறையாய்
இன்னும் ஈரம் இருக்கிறது
அகத்திலும் புறத்திலும்.

சின்னதொரு மனசோர்விலும்
புடைத்துக் கொட்டும் மழையென
அத்தனை ஞாபகங்களும்
மெத்தென்ற இருக்கையில்
இன்றும்
முள்ளாய் குத்தும் நினைவுகள்..

பயணங்கள் முடியட்டுமே...
ஊரில் என் முற்றத்து ரோஜாவும்
பூக்கட்டுமே..


-கவிதா. நோர்வே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-18


su.siva

18 years 6 months ago

உங்கள் கவிதை அழகாக இருக்கிறது.....ஆனால்

su.siva

18 years 6 months ago

அடையாளங்களை இழந்து, சுயமிழந்து நாடற்றவர்களாய, ஏதிலிகளாய் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளும், வலியின் அவலக்குரல்களும் கவிதையாய் வெளிப்படும்போது எளிமையான வார்த்தைகள் கூட உயிர்ப்பு நிறைந்ததாகிவிடும் என்பதற்கு உங்கள் கவிதையே சான்று. காயம்பட்ட இடத்தில் காதலியின் முத்தம் பதிந்ததுபோல் தழும்புகளை காயங்களாக்கி அதில் மென்மையாய் முத்தமிடுகிறது உங்கள் கவிதை.
முகமிழந்து, அடையாளமிழந்து, பண்பாடு, காலச்சாரம், வாழ்க்கைநெறி, எதிர்காலக் கனவுகள், அத்தனையும் தனக்குள்ளே புதைத்து. புலம்பெயர்ந்த நாட்டில் அணிந்துகொண்ட முகத்திரையின் அடையாளமாய் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கொள்ளும் இனத்தில், அகதி வாழ்க்கையில் தன்னையே இழந்து கொண்டிருந்தாலும் அதன் வலியை, இழப்பை, வரலாற்றை, இழக்கை பதிவுசெய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மண்ணையும் மக்களையும் சுவாசித்து அகதியாய் அடையாளமிழந்து, தங்கள் இருப்பை பதிவுசெய்ய முடியாமல் வலியோடு வெளிவரும் குரலின் தனித்து சாதிக்க முடியாத வார்த்தைகள், உணர்வுப்புலத்தில் சூல்கொண்ட மலராக செழித்து கவிதையாய் மலரும்போது வரலாறு படைக்கிறது.

சுற்றி இருந்த பக்கத்து
அன்ரி அங்கிள் எல்லாரும்
என்னை அகதி என்று சொன்னதையும்...
ஆகதி வாழ்வின் வலியை அழகாக பதிவுசெய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • முடிவென்ன?
  • மொழி... எது கவிதை?
  • நிழல் நிஜம்
  • செக்குமாடு... திரௌபதை
  • சகலமும் நான்
  • காதலில்
  • காத்திருக்கிறேன்
  • கறுப்புதேசம்
  • மூலைகள்
  • இழப்பு
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube