மனம்.. மாற்றம்
01.
மனம்
---------
அவன் அவள்
இவர்கள் அவர்கள்
இவர்கள் எல்லாம் வீட்டுக்குள்
இரண்டு கால் மிருகங்கள்
நீயும் நானும்
நிலையாய் இணைவதை
நிறுத்தத்துடிக்கும்
(அ)நியாய வாதிகள்
நீயும் நல்ல நீ
நானும் நல்ல நான்
நல்லவனாதலால்
நகர முடியவில்லை
நிலையாய் நிற்க முடியவில்லை
நீண்ட தூரம்
விடைபெறத் துடிக்குது மனசு!
02.
மாற்றம்
------------
என்றேனும் மரணித்துப் போகக்கூடிய
மாந்தர்களின்
மனம் என்ற குரங்கு
எண்ணற்ற பல மந்திரக்கனவுகளால்
கணத்துக்கு கணம்
கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது.
கண்டதையும் கேட்டதையும்
கௌரவமாய் நினைத்து
கடிவாளம் போடாத குதிரையைப் போல்
காரணமே தெரியாமல் ஓடி- கடைசியிலே
காலனின் கைகளிலே கட்டுண்டு போகிறது.
எனினும்
இடைப்பட்ட இந்த ஓட்டத்தில் தான்
எத்தனை மாற்றங்கள்…
மாற்றம் ஓன்றே மாறாததாயினும்
மரணம் ஒன்றே மாற்ற இயலுமோ?
-கலாநிதி தனபாலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-19