முடிச்சுக்கள்
-------------------
எமன் கைகளில்
இருந்தா எறிப்படுறது?
பாசக்கயிறுகளாய்
வீசப்படும் ஒவ்வொரு
முடிச்சிலும்
எனது உணர்வுகள்
இறுக்கபடுகிறது
வலியில் இருந்து
விலகும் அவசரத்தில்
தொலைந்து போகிறது
எனது சித்தம்
ஒவ்வொரு முடிச்சுக்களாய்
மூச்சிரைக்க
அவிழ்க்கும் அறுக்கும்
கணங்களையும்
பயன் படுத்தி
எறியப்படும்
புதிய முடிச்சுக்கள்
அகோரமாய்ச்சிரிக்கின்றன
வலுவிழந்து தொய்ந்த
என் கைகளில்
விழுந்திழுக்கிறது
ஒரு கொடும்பாறை
என் வளையல்கள்
நொருங்கி
கொட்டிக்கிடக்கிறது
கிழிந்து கழன்ற
என் புடைவைக்கருகில்
அவையள்ளி நிமிர்கையிலே
நிற்கிறாய் நீ
நீ எறிந்க
வார்த்தைக்கயிறுகளும்
மயான அமைதியும்
அறுந்து கிடக்கிறது
எம்மைச்சுற்றி
உன் முகத்தில்
விரிந்து நிற்க்கும்
திருப்தியில்...
எந்த வார்த்தையும்
சிந்திவிடாமல்
உன்னையும் தாண்டி...
பயணப்படும்
எனது வாழ்க்கை...
குற்ற உணர்வுகளை
இனியாவது தொலைக்கட்டும்.
-கவிதா நோர்வே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-23