இருக்கட்டும்.. எழுது உன் கவிதையை.
01.
இருக்கட்டும் எதற்கும்...!
----------------------------------
பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய
கடிதமொன்றை
பத்திரமாய்
வைத்திருந்து
பிரதியொன்றை
எனக்கின்று
அனுப்பித்தந்த
நண்பனின்
அன்பைப்போல
இருக்கட்டும் எதற்கும்
என்று
இதுபோல் இன்னும்
எத்தனையோ
நம்
எல்லோரிடமும்.
02.
எழுது உன் கவிதையை...!
---------------------------------
வேறு எதற்காக
இல்லையென்றாலும்
இடம் மாறி
இடம் மாறி
இப்போது
நீ இருக்கும்
இடத்தை
யாவருக்கும்
அறிவிக்கவாவது
ஏதாவதொரு
இணைய தளத்தில்
எழுதேன் உன் கவிதையை
புனைப்பெயர் எதுவுமின்றி.
புலம் பெயர்ந்த உன் வாழ்வுபற்றி.
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-07