Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மதம் பிடித்தவன்

- இமாம்.கவுஸ் மொய்தீன்

மதம் பிடித்தவன்!!
----------------------

மதம் பிடித்தவன் அவன்
அவனுக்கு...
மனிதன் பிடிக்காது
மனிதம் பிடிக்காது
மனிதநேயம் பிடிக்காது.

மதம் பிடித்தவன் அவன்
அவனுக்கு...
கொள்கை தெரியாது
கோட்பாடு தெரியாது
தத்துவம் தெரியாது.

மதம் பிடித்தவன் அவன்
அவனுக்கு...
சமுதாயம் புரியாது
சமத்துவம் புரியாது
சமநீதி புரியாது.

மதம் பிடித்தவன் அவன்
அவனுக்கு...
உயிரின் அருமை அறியான்
உதிரப் பாசம் அறியான்
உறவுகளின் அருமை அறியான்.

மதம் பிடித்தபன் அவன்
அவனுக்கு...
சதி செய்யத் தெரியும்
குண்டு வைக்கத் தெரியும்
கொலை செய்யத் தெரியும்.

மதம் பிடித்தவன் அவன்
அவனுக்கு...
மதத்தைப் பிடிக்கும்
மடமை பிடிக்கும்
ஜடங்கள் பிடிக்கும்.

மதம் பிடித்தவன் அவன்
அவனுக்கு...
தானி... ஓட்டுனரின் இயக்கத்தால் மட்டுமே
இயங்குதற் போல்
இவனும் .

மிருகங்களில்...
மனிதநேயம் கொண்டவை பற்பல
கொடியவையும் நஞ்சு கொண்டவையும்கூட
தத்தம் இரைக்காகவும் பாதுகாப்புக்காகவும் மட்டுமே
மற்றவற்றைத் தாக்கும் கொல்லும்.

மதம் பிடித்தவன் அவன்
அவனை...
மனித உருவில் மிருகம்....
...த்தூஉஉஉ..
மிருகங்களை இழிவு படுத்தல் வேண்டாம்.


-இமாம்.கவுஸ் மொய்தீன்.


பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-16


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நிலை கொண்டுவிட்டது!
  • லாட்டரி!
  • நிதானம் இழந்தால்....!
  • வாழைத் தோல்!!
  • இறந்தும் வாழ்வர்!!
  • இறுதி மரியாதை!
  • வீழ்ந்தபின் ஞானம்!!
  • ஈழம் உனக்கேயடா!!
  • இப் புத்தாண்டிலாவது உணருமா?
  • என்ன குறை உன்னில் தமிழா?
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube