முடி இழந்த மன்னர்கள்
------------------------
சிறுகச் சிறுகச் சேர்த்து
சிறகு பொத்தி பாதுகாத்து
உணர்வுகளால் கட்டிக்காத்து
உருவாக்கிய உலகிலிருந்து
உபயோகமில்லாப் பொருளாக
உறவுகளால் உதறப்பட்டு
வீதியில் விதியை நொந்து
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி
போகும்திசை தெரியாமல்
போகிறர்கள் அந்த
போக்கத்தப் பெரியவர்கள்
-அன்புடன் துரை
''கனவு மெய்ப்பட வேண்டும்''
- துரை.ந.உ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-16