மகுடம் சரிந்தது
--------------------
மங்கையர் குலத்தின்
மகாராணியாக
தனக்குத் தானே
மகுடம் சூட்டியிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டு
மகா ஜனங்கள்-திரு
மண வீட்டில்
கை நனைக்க
வெள்ளிச் செம்பு
கேட்ட போதுதான்-
அரசிக்கு அவரது
பொக்கிஷ அறையின்
பொருளாதாரம்
மட்டுமின்றி
மண மேடையேறிட-
மங்கல நாண்பூட்டிட-
பொருள் வேண்டிடும்
புதிரான உலகும்
புரிய வந்தது.
-ராமலக்ஷ்மி, பெங்களூர்
வலைப்பூ: முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-06