முரண்பாட்டுச் சிந்தனைகள்
நான்
கடந்துவரும்
கல்லறைகளில் எல்லாம்
எத்தனையோ கதைகள்
புதைந்து
கிடக்கின்றன,
மரங்கள்
எல்லாம் என்னை
பார்த்து ஏதோதோ
கடந்தகால சம்பவங்களை
சொல்ல நினைப்பதாய்
எனக்குப்படுகிறது,
நான்
நடந்துவரும்
சாலைகளில் எல்லாம்
எழுதப்படாத எத்தனையோ
வரலாறுகள்
சிதிலமாகி
கிடக்கிறது,
உருவம் எல்லாம்
ஏதோ ஒரு பயம்,
என் மனதின் எங்கோ
ஒரு மூலையில்
விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே
இருக்கிறது.
இரவுகளில் எல்லாம்
என்னை மீறின
சிந்தனைகள்
எமக்கு மட்டும் தான்
ஏன் இப்படி
நடக்குதென்று.....
சுதாகரன், கொழும்பு
அடையாள இலக்கம்: 356
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-01