Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நடைபிணமாய் நடந்து..

- வி. பிச்சுமணி

நடைபிணமாய் நடந்து..
------------------------------

அடர்ந்நத வெண்பனியில்
எழு ஞாயிறு முழு நிலவாய்
காட்சி பிழைசெய்த நாளில்

திங்களில் ஞாயிறை
காண தேநீர் கடையில்
துவாரக பாலகனாய்
காத்திருந்தேன்

கடல்அலைகள் ஞாயிறை
கரைந்திடுமா என்ன
உன்னை காணவில்லை

மேகம் மறைத்த
இரவாய் வாடிபோனேன்

சாரல் விழுந்த
புள்ளி கோலமானேன்

கல்லெறிந்த
நீர் பிம்பமானேன்

மழலையர் பள்ளி
முதல்நாள் மழலையானேன்

கூட்டத்தை விட்ட
குருட்டு கொக்கானேன்

புதிய மகிழ்ஊர்தியின்
முதல் கீறலானேன்

காடையர் குண்டு விழுந்த
ஈழ பதுங்குகுழியானேன்

என்ன செய்வதறியாது
தீக்குளிக்கும் தமிழனானேன்

இனி என்னவாவேன் என தெரியாது
என்ன என்னமோ ஆனேன்

வண்டிகாரன் தூங்கினாலும்
பழகிய வண்டி மாடுகள்
வீடு சேர்வது போல்
நடைபிணமாய் நடந்து..

-வி. பிச்சுமணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-05


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கண்கள்
  • அந்த இரவை போல்
  • மழை சோவென பெய்து
  • இருள் கவியும் முன் மாலை
  • சுயமில்லாதவன்
  • என் மகளே
  • உன் பெயர் உச்சரிக்கையில்
  • ஒட்டஞ்சில் சொல்லும்
  • மழை கோலம்
  • என் காதலி வருவது போல்.. தோழி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube