மீண்டிடுமா…
----------------------
01.
போட்ட விதைதான் வருகுது
புது வடிவில்,
மண்ணில்-
முளைத்துச் செடியாய்,
பெண்ணில்-
பேசும் மழலையாய்…!
பாரிலுண்டு
பல மொழிகள்,
பல மொழிக்கும் முதல்மொழி
பவளவாய் சிந்திடும்
மழலைமொழி…!
மகிமைகள் தெரிந்திருந்தும்
மழலைகள் கிடக்குதே மண்ணில்,
அது ஏதோ
மௌனத்தில் மறைந்த உண்மை,
மீண்டிடுமா இதிலிருந்து பெண்மை…!
02.
எண்ணி எண்ணி…
நிலவே சாட்சி என்று
சொன்னவன் சென்றுவிட்டான்
என்
நித்திரையைக் கெடுத்துவிட்டே,
நித்தம் நித்தம்
எத்தனை நாளைக்குத்தான்
எண்ணிக்கொண்டிருப்பது
மொத்தமாக
இத்தனை நட்சத்திரங்களை…!
ஏண்ணித் தீர்ந்தால்தான்
அவன்
என்னிடம் வருவானோ…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-28