ஒளிமயமே

உறவுகட்கு உயிரெழுத்தாய்
எத்தனையோ சொந்தங்கள்
வேதனையில் விரக்தியில்
விழி சொல்லும் கவிதைகளில்
நான் மட்டும் நடுவிலே

நாதியற்ற அனாதையாய்!
நின்றிருந்த வேளை தன்னில்
இருளகற்றும் ஒளியைப்போல
வந்தனரே சூரியக் குழந்தைகள்
ஏற்றினார் எம் வாழ்வின் சுடரதனை
இனியெல்லாம் ஒளிமயமே................

-பத்மநாதன் உதிஸ்ரா

******

அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்

http://www.changetheirlife.org/orphanage/A_anpagam_%20poems.asp

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others