நான் அவன்
நானாக அவனும் அவனாக நானும்
சாத்தியமில்லை
எனது சந்தோசங்கள் அவனது சந்தேகங்கள்
எனது ஆசைகள் அவன் கற்பனை செய்யாதவை
அவனது ஆசைகள் என்னை அடிமை கொள்பவை
எனது கற்பனைகள் அவனுக்கு புரியாதது
அவனது கற்பனைகள் அலுத்துப்போனவை
எனது நோக்கு அவனுக்கு புதியது
அவனது நோக்கு எனக்கு பழயது
அவன் வளர்ந்தும் ................ நான்............
நான் குழந்தை அவன்
நான் அவனாவதும் அவன் நானாவதும் சாத்தியமே இல்லை
நான் நான் அவன் அவன்
--------------------------------------
உன் தனிமை
நான் தனிய இருப்பதைப்
பற்றி நீ
கவலைப்படுவதாய்
எனக்கு உன்துணை கட்டாயம்
தேவையாக இருப்பதாய்
ஏன்மேல் நிறையவே
அனுதாபம் இருப்பதாய் அதை
நான் அறியாமல் இருப்பதாய்
இப்படி நிறையவே பேசினாய்
இவை எனக்கு புதியவை இல்லை
நண்பனே
நான் சுதந்திரமாக இருப்பதற்கு காரணமே
உன்துணை இல்லலாமல் இருப்பதுதான்
இதை நீ அறிந்திருக்க ஞாயமில்லை
இனியாவது
உன் தனிமைபற்றிபப் பேசு
பயப்படாமல் மனம் திறந்து .
-றஞ்சினி
- றஞ்சினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01