மூன்றாவது இதயம்.
-----------------------------
உன்னிடம் அடைக்கலமாக
இருந்த எனது
எனது இதயத்தை
ஒரு அழுக்குப் பாறையில்
கொழுவி விட்டு
நீ ஒதுங்கிக் கொண்டாய்
கறைபடிந்த உன் இதயத்தை
கழுவிக் கொள்ள
ஒரு மூன்றாவது
இதயத்தையும்
நீ தேடிக்கொண்டாய்..
கால நெருக்குதலில்
துவானமிழந்த
மழைகளையும்.....
ஈரலிப்பில்லா காற்றையும்..
நீ வசமக்கினாய்
இதயத்தின் வெற்று உருவத்தை
சுமந்து பயணிக்கும் நீ
உனக்குரிய குழியை நீயே
தோண்டி அதற்குள் அமர்ந்து கொண்டாய்
நடக்கவே முடியாத நீ
பறக்க ஆசைப்பட்டாய்...
உன் பறத்தல் பற்றிய
ஆசைத்தீயில் அமிழ்ந்து
அழுகின்றாய்..
உனக்கு தெரியுமா..
பொய்களும் வஞ்சனைகளும்
என்றும் ஜெயிப்பதில்லை..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-01