Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இனியும் பொழியேன்.. அரூபமானவன்

- கிண்ணியா பாயிஸா அலி

இனியும் பொழியேன்.. அரூபமானவன்

01.
இனியும் பொழியேன்
---------------------------

கத்தி முனையில் நடப்பதாகவும்
நொறுங்கும் மெலிதான
கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான
நுண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும்
அலுவலகத்தில் வேணுமென்றால்
தொடர்பாடலாம்.
ஆனாலும் உன்னோடுமா..?
பகலவன் வெம்மையில்
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர்புறக்கணிப்புகளால்.
இன்னமும் எத்தனை தடவைகள்தான்
தன்மானத்தைப் பிணை தருவது?
என் நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட.
புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்துபோன
இறுதிக்கணங்களில்கூட
ஒரு வேகஉந்துருளி உதைத்தெறிந்த தெருநாயாய்
காயங்களின் அனுக்கங்களோடே
மீளத் திரும்புகிறதென் பிரியங்கள்
அவமானங்களைச் சொட்டியபடி.
முன்னைய தடவையும் போலல்லாது
முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய்…
இனியும் பொழியேனென் கிரணங்களை
வெறுமனேயும்
இனி
ஒரு உலர் காட்டில் பரவும்
பெருந்தீயின் அதிவேகங்களோடே
புசுபுசுவெனவே துளிர்த்துப் போகட்டுமென்
பசியவனம்;
இப்பிரபஞ்சமும் தாண்டியே…


02.
அரூபமானவன்
--------------------

அதீத முயல்வுகளினூடே சுபமாய் முடிவடைவதான
மிகச்சில நிகழ்வுகளிலும்கூட அரூபமாயெனை
எதிரீடு செய்யும் கிளைத்து நீண்ட
கோரநகங்கள் சூடிய பெயரறியாச் சில ஊணுண்ணிகள்.
வென்றுவிட வேண்டுமே யென்ற பதகளிப்போடு
வெளியிலே என்றைக்குமே ஓயாத ஆட்டந்தான் அவைகளோடு.
ஒவ்வோர் தடவையும் அவைகளே வென்றுவென்று
மிக அகங்காரமாய் தம்துர்க்கரங்களை
உயர்த்தி உயர்த்தி எம்பியபடியே கூக்குரலிட
நானோ எப்போதுமே துவண்டு வீழ்வேன் களத்திலேயே.
நிலம் புதைந்த நீர்க்குழாய்ப் பின்னலிலே
எங்கோ ஓர் சிறு வெடிப்பு அரூபமாகவே.
நானறியாமலே நீர் பொசிந்து பொசிந்து
மண்ணுறிஞ்சிட, உச்சத்திலே இருத்திய
நிறை கொள்கலனோ காலியாகிற்று
சப்தமின்றியே.
நான் சாய்ந்து விடக்கூடாதென்றா
சட்டென உள்ளிழுத்துக் கொண்டாயுன் தோள்களை.
என்றைக்கும் என்றைக்கும் போலவே
என் தொழுகைப்பாய் மட்டுமே
அளவீடு செய்திற்றென் கண்ணீரின் உப்புச்செறிவை.
நீ மட்டுமேன் மௌனமாகவே இருக்கிறாய்?
புலனறியா நிலமிருந்துங் கூட எனைப் பொசுக்கும்
முரண்கள் நெருக்கீடுகள் போலவே
நீயுங்கூட அரூபமானவன் என்பதனாலா?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-26


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தசைரோபோ.. என் சீருடைப்பிறையே
  • கண்ணீரில் கரையும் தலையணைகள்
  • நிலைமாறல்
  • மாயக் கயிறு.. பாறாங்கல்
  • கருஞ்சுவரில் குழாய் வரைந்து..
  • சிறுமீனாய்
  • கடைசி இருக்கை.. மிதந்து..சிட்டுக்குருவி
  • முளைத்தெழும்.. ஒப்படைத்தாயிற்று

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube