மானுடச் சுடர்.. மனசுக்குள் வண்டு.. ஆசை மழை
01.
மானுடச் சுடர்
--------------------
பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்கும் உலகில்
பொய்யுக்கும் மெய்யுக்கும் ஜீவனாம்சம்
வழக்காடு மன்றில் நிலுவையில் கிடக்கிறது
உண்மை ஜீவனை ஊனம் வெல்வதில்லை
மானுடச் சுடருக்கு மரணம் எல்லையும் இல்லை
இடி மின்னல் கீற்றும் இவனடி கிடக்க
தமிழ் வானை கிளித்தான், மில்லர்
அகிம்சை கீற்றொடு
ஆழி அலையாய் எழுந்தே
ஆன்மாவை வென்றான், திலீபன்
மண்மீட்ப்பு போரிலே மரபுக் கனல் மூட்டி
தந்தை சொல் காத்த தணையனாய்
உயிரை முந்தி விரித்தான்
சாழ்ஸ் அன்டனி
ஒடிபட ஒடிபடத் தானே
சாரல் அடிக்கிறது இங்கே
இந்தச் சாரலுக்குள் தானே
தமிழீழ வானமும்
தாய் மண்ணை தொடுகிறது
தோழா நீதிக்கோர் நித்தியச்சுடர்
மனு நீதி கண்ட சோழனே
கொன்றவனை நீயும் கொல்
சம தர்ம தராசு இன்று உன் கையில்
விடுதலைச் சுடரின் கீற்றுனை
மாற்று நிறங்கள்
ஊற்றுக் கொள்வதில்லை
மானுடச் சுடர்
மாவீரனின் மகுடமே
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்றுருந்தால்
இலவம் கிளியும் உன்னை பார்த்து சிரிக்கும்.
02.
மனசுக்குள் வண்டு
-------------------------
ஆசை எனும் அனலுக்குள்
ஆதி மனிதன் வீழ்ந்தான், என்று
பாதி வழியில் ஒருவன்
பகுத்தறி வாளனாய்
பகல் விளக்கை தந்தான்
இரவின் விளக்கெடுத்து
இவனடி நான் தொடர்ந்தேன்
இவனுக்குள் வாழும்
அந்த மீதி மனிதன்
மாம் பூவுக்குள்ளும்
மண், உயிராய் நுழைந்து
தேகம் காட்டாமல்
தேன்கனி உண்டு
தெவிட்டிக் கிடக்கிறான்
வெய்யிலே இவனை நீ
சுட்டுப் போட்டாலும்
விருந்துண்ணும் விழிகளினால்
மின்மினிக் கருவறைகள் கட்டி
ஆசை எனும் அருவியிலே
அந்தியிலே தினம் நனைந்து
மனசுக்குள் வண்டோடு
மாந்தரை ஏய்க்கிறான்இவன்.
03.
ஆசை மழை
---------------------
ஆசை மழை ஊர்கோலம் அழைக்க
அனுதினமும் நனைந்தேன்
அந்த மழையில்
சாரல் அணைத்து வர்ணங்களை
பூசிக்கொண்டது என் மேல்
மின்னும் வைரங்களை நீரோடையில் கண்டு
அந்த வைரங்களையும் அள்ளிக் கொண்டேன்
அக்கணமே, என்னை நானே இழந்தேன்
தடாகத்தில் நின்ற தாமரையாழும்
கொடியிடை வளைந்து சிரித்து
வானுயர்ந்த தன் காதலனோடு
யாடையில் மெளன மொழி பேசி
என்னை பார்த்து கேலி செய்தாள்
வளைகொண்ட நீர்ரலைகளோ
மின்னிய வைரங்களை
அள்ளி எடுத்து
ஒளி குன்றா கீற்றோடு
அந்த ஆதவனிடமே
திருப்பிக் கொடுத்துவிட்டது
வழி மாறிப்போன மனசு உரு மாறி
உண்மை உணர்ந்து வெக்கித்து குனிய
வானவீதியில் போன மேகங்களும்
மெளனம் கலைத்து இடியோடு
இணை மின்னல் எழுப்பி
கொடும் மழை வீசி கடும் கோபம் காட்டின
பூவுலகை காணவந்து புழுதியிலே வீழ்ந்ததினால்
குடைக்குள் புகுந்திட எண்ணம் இல்லை
மழையில் மூழ்கி மாசுதனை கழுவுகிறேன்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14