தமிழின்பம்
சத்தி சக்திதாசன்
யான் பெற்ற நற்றவப் பயன் இங்கு
யாத்தெடுத்த தமிழ் கோர்க்கும்
நூற்தொடுக்கும் மனமுடைத்து எனை
நூறாண்டு நிலையாக்கும் வகை செய்தான்
கவியெந்தன் கருத்தினில் பொழிய - என்றும்
கற்றுணர்ந்த தமிழென் கைகொடுத்து உயர்க்கும்
சிற்றறிவேயெ ந்தன் சிரசில் கொண்டாலும்
சிந்தனையொ ப்ப வழியும் நினைவலையே
பலர் ரசிக்க தமிழ்கூறி மகிழ்ந்திருந்து
பண்பாடி யென்றும் இசையினில் மூழ்கி
தாய்மொழியின் அழகில் அமிழ்ந்தெந்தன்
தந்தை நாட்டின் கனவில் மிதந்திருப்பேன்
சப்தத்தின் ஸ்வரங்கள் மெருகேற்றி
சங்கீத மழைபொழிந்து கண்ணயர்க்கும்
சொற்றுணை கொண்டு யானிங்கு உம்முடனே
செந்தமிழ் புகழ்பாடி சிறந்திருப்பேன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
