Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மாயக் கயிறு.. பாறாங்கல்

- கிண்ணியா பாயிஸா அலி

மாயக் கயிறு.. பாறாங்கல்
01.
மாயக் கயிறு
----------------------

பூண்டு மணமும் குக்கர் விசிலொலியும் தாண்டி
கனவுகளால் மட்டுமே பயணப்பட முடியும்.
இரைச்சலும் எதிர் கூற்றுகளும் மட்டுமே
இரைந்து கிடக்கும் செவிப்பறைகள்
ஒரு மென்மையான பாடலை ரசிப்பதும்
நீளமான கூர் நகங்கள் பூவாகித் தேன் சொரிவதும்
கனவுகளுக்குள் மாத்திரமே சாத்தியமாதல் கூடும்.
சதாவும் புழங்கப்படும் கூடமொன்று
தேய்ந்த கால்தடம் தவிர வேறதைத்தான் பார்த்திருக்கும்.
பறக்கவிட்டிருக்கிறேன் கனவுகளை
பிரபஞ்சத்தின் எல்லை வரை
ஒரு காற்றாடி போலே
பயமேது எரிமலை சாக்கடை பற்றியெல்லாம்
ஏனெனில்
தெய்வீகமே நுண்ணிழைகளாகித் திரிந்திருக்குமென்
காற்றாடியின் மாயக்கயிறு
வலிமையானதும் உன்னதமானதுங்கூட..



02.
பாறாங்கல்
----------------

தென்றலின் தொடர்வரவு
சடாரென நிறுத்தப் படுகையில்
முற்றம் வெற்றிடத்தாலே நிறைக்கப் படுகிறது.
புழுக்கமே மிக அடர்வாய் பூத்திருக்க
ஒரு பூத்தானும் அசையேனென அடம் பிடிக்கிறது.
வலிய பாறாங்கல்லாய் அடைத்துப் போட்டிருக்கிறாய் வாசற்கதவை
உன் நீடித்த மௌனங்களால்
எந்தக் கோலால் புரட்ட எத்தனிக்கலாம்
எதற்கெனப் புரியாத இப்பாறாங்கல்லை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தசைரோபோ.. என் சீருடைப்பிறையே
  • கண்ணீரில் கரையும் தலையணைகள்
  • இனியும் பொழியேன்.. அரூபமானவன்
  • நிலைமாறல்
  • கருஞ்சுவரில் குழாய் வரைந்து..
  • சிறுமீனாய்
  • கடைசி இருக்கை.. மிதந்து..சிட்டுக்குருவி
  • முளைத்தெழும்.. ஒப்படைத்தாயிற்று

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube