Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பொருளற்ற சில

- மதியழகன் சுப்பையா

பொருளற்ற சில......

மதியழகன் சுப்பையா..
மும்பை.

ஒன்று

இது முட்டாள்களின் உலகம்
முட்டாள்களை பின்பற்ற
அற முட்டாள்கள் உண்டு .

முட்டாள் அல்லாதவனின்
பேச்சும் செய்கையும்
மூடத்தனம் என்கிறார்கள்
முட்டாளும் அறமுட்டாளும்.

அறமுட்டாள்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
முட்டாள்கள் தான் ஆளுகின்றனர்.

முட்டாள்த்தனமாய் முடிவெடுத்து
அறமுட்டாளை இன்னும்
முட்டாளாக்கி விடுகின்றனர்

அறமுட்டாள்கள்
முட்டாள்களை
அறிவாளிகள் என
நம்புகின்றனர்

முட்டாள்களோ எல்லோரையும்
அறமுட்டாள் எனவே
நம்புகின்றனர்.

முட்டாளை முட்டாளென
அறமுட்டாளும்
அறமுட்டாளை அறமுட்டாளென
முட்டாளும், கண்டு புடித்து
விடுகின்றனரே
இதில் யார் முட்டாள்?.




இரண்டு


ஆண்களின் கம்பீரத்தை
வெளிப்படுத்தும்

பெண்களுக்கு அழகு சேர்க்கலாம்
அல்லது
என்னது எப்பப் பார்த்தாலும்
என்று அவப்பெயராகலாம்.

குழந்தைகள் பெரும்பாலும்
உதைக்கப் படு வார்கள்

பொது இடத்தில்
கௌரவம் அல்லது கவர்ச்சி

கடன் வாங்கும் போதும்
திருமணத்தின் போதும் கட்டாயம்.

பசுக்களுக்கும் பட்சிகளுக்கும்
எப்படியோ தெரியவில்லை.

ஒரே பால் என்றால்
ஒன்றுமில்லை.
எதிர்பாலர் என்றால்
இடைஞ்சல்தான்.

ஆயுதமாய் அதையே பொளப்பாய் பலரும்
தெரியமலேயே சிலரும்
வகைவகையாவும்
இளிக்கின்றவர்கள்
இருக்கின்றார்கள்.

மூன்று

அந்த கருத்துப்போன
கழுத்து மணி

அது மிரண்டபோது அலறி
நடந்தபோது இசைத்து
இருந்த போதும்
இடையிடையே இயங்கி
உயிராய் இருந்தாய்

அது இல்லை
நீ இருக்கிறாய்

அது கறியாகிப் போனது
நீ கருப்பாகி போனாய்

அதன் உயிர் பிரிந்தது
உன் உயர்வான ஓசையும்தான்

உயிரோடு சேரும் போது
ஜடமும் ஜீவன் பெறுகிறது
மரிக்கிறது..

மீண்டும்
உயிர் பெறலாம்
இன்னொரு உயிர் வந்தால்.

நான்கு


ஏதோ ஒரு காரணத்திற்காக
காரணமே இல்லாமலும்
ஆனால்
காண்கின்ற ஒவ்வொருவரும்
ஒரு காரணம் சொல்லிவிட்டு
சரியான காரணம் எதுவென கேட்பர்

காரணம் இதுவென சொன்னால்
இருக்காது
இப்படித்தான் இருக்குமென மறுப்பர்

காரணத்தை வைத்துக் காரியம்
செய்ய வேண்டியதில்லை

செய்கின்ற காரியத்திற்கெல்லாம்
காரணமும் அவசியமில்லை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அவளும் மல்லிகையும்..
  • மதியழகன் சுப்பையா கவிதைகள்
  • இரு பதிவுகள்
  • பேசுவது குறித்து சில
  • தனிமையின் பிடியில்
  • மவுனப் பயணி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube