ஆதவன் வரவை எண்ணி.. தாயின் மணிக்கொடிகள்
01.
ஆதவன் வரவை எண்ணி
----------------------------------------
பிறப்புக்குள் பிறப்பை வைத்து
இறப்பில்லா ஈகை வளர்த்து
ஊருக்கொரு வாசம் இன்றி
உலகத் தமிழனுக்காய் உதித்தவனே
நீ வாழி
பரந்த உலகிற்கு விண்ணில் உதையவன்
வருந்தும் தமிழர்க்கு நீயே சூரியன்
உன் விழிகளிரண்டும் சிவக்கச் சிவக்க
கதிரொளி கண்டோம் கானகத்தில்
உன் வேழ்வி உபாச விரத நோண்பில்
உலைக்களம் தணித்தோம்
தமிழீழத்தில்
புரட்ச்சிக் கனலின் ஊற்று நீ
புதிய வார்ப்புகளின் சிறப்பி நீ
எழுச்சி மலையின் உயர்ச்சி நீ
தமிழீழ மலர்ச்சியின்
தேசியத் தந்தை நீ
நீ வாழும் காலமே எமது பொற்காலம்
நீ தந்த வாகைகளே தமிழரின்
முடி ஆட்ச்சி காலம்
பிரபஞ்ச ஒளியே பிரபாகரா
போற்றுகிறேன் உன்னை
உனக்கு இன்று அகவை ஐம்பத்தாறு
சுதந்திரச் சுடர் நீ நிரந்தர ஒளிகொடு
வாகைகள் சூடி வாழ்வான் தமிழன்
வையகத்தில் தனக்கொரு நாடெனும்
தமிழீழத்தில்.
02.
தாயின் மணிக்கொடிகள்
----------------------------------------
ஏட்டில் எழுதவில்லை - என்
சிந்தனையில் செதுக்கவில்லை
கண்டேன் என் தாயகத்தில்
தமிழ்த் தாயின் மணிக்கொடிகளை
குடியுரிமை வாழ்விளந்து
குலம் தழைக்கும் நிளல் இளந்து
முடமாய் ஜடமாய்
இறைமைக்கும் இருள் கொடுத்து
நடைப் பிணமாய் கிடந்தவர் இடையே
தமிழ் குல தலைமுறை விடியலுக்காய்
உங்கள் இன்னுயிரை ஈர்ந்தவர் நீங்கள்
புலியாய், கரும் புலியாய்,
கடல் புலியாய் வான் புலியாய்
வியூகச் சமர் புரிந்து
வைர உயிர்களை
தாய் மண்ணுக்கு தந்த
மாவீர மறவர்களே
உங்கள் ஆலயச் சந்நிதியில்
உறவுகள் வந்துள்ளோம்
களம் ஆடி களம் ஆடி
தமிழீழ எல்லை வகுத்த உறவுகளே
உங்கள் உதிரம் அதில் பாத்தி கட்டி
விடுதலை பயிர் வளர்த்தவர் நீங்கள்
உரம் ஏறி உரம் ஏறி தவம் இருக்கும்
தாய் மண்ணெடுத்து நெற்றித் திலகம் இட்டு
நிமிர்த்துகிறது எம்மை உங்கள் திருமுகம்
விடியும் நாளை விடியும் ஓர் நாள்ளென
தமிழீழ விடிவையும் கண்டோம்
உயிர் கொடை ஈர்ந்த
உத்தமர் உங்கள் தீரத்தில்
குறு நிலமும் ஆண்டு
குருசேத்திரமும் தந்தான்
தேசியத் தலைமகன் பிரபாகரன்
தமிழ் தேசிய விடுதலை ஒளி முகத்தில்
அகிலமே திரண்டு அழித்தாலும்
வஞ்சனை நண்பர்கள் நஞ்சினை கலந்து
வெண் சிறை இட்டாலும், அணையுமா ?
அணையாது அணையாது இந்த ஒளி
வெண் சங்கின் நாத ஒலி கேக்கின்றது
அழைப்பாணை விடுத்து
போர் முரசும் கொட்டுகின்றது
உங்கள் நினைவாலயம் தனில் நின்று
உமை தொழுகின்ற விழிகளிலே
ரெத்த நாளங்கள் வெடித்து
சுதந்திர வர்ணம் தீட்டி
தமிழீழத் தாய் மண்ணை தொடுகின்றது
சுதந்திர நாத்துக்கள் சுயம்புகளாய் எழும் எழும்
தன் மானக்குடை விரித்தே
தமிழீழத் தாகம் தணித்திட பகை அறுக்கும்
தளிர்விரல் பாதங்கள் தாயகம் தழுவும்வரை
இமையச் சுவரும் இவரிடம் சிறிதே
கண்டேன் தாயின் மணிக் கொடிகளை
என் தாயகத் தமிழ் மண்ணில்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-12-10