ஆசை.. காதல் சிற்ப்பங்கள் .. விசச்சிலந்தி
01.
ஆசை....
-------------
எண்ணம் என்னும் கோட்டைக்குள்
ஆகாசப் பூக்களை
தோரணம் கட்டியது யார்
விதையில்லா விருட்சத்தின்
ஆசை நூலில்லாடும் ஆயுள் கைதி நான்
ஓசை இன்றி எப்படிச் சொல்வேன்
ஆசைத் துறவியல்ல நான்
நரையும் திரையும் சூழ்ந்த பெரிசுகளே
ஆளக் கடலிலும் முத்தெடுக்கும்போதில்
இளமை ஊஞ்சலை எப்படி நிறுத்துவேன்
பதினாறுதானே என் வயசு
பகலில் கொள்ளையிடும் நட்ச்சத்திரங்களை
இரவில் குவிக்கும் இறைவனும்
ஆசை பித்தனே
இமையை இமை தொடாது விடுமா
விழியை உறக்கம் தழுவாது தணியுமா
தணிந்தது தாகம் என்று
பாகம் பிரிக்கவில்லை
ஒழுக்கம் வழுவாது இழுக்கத்தில்
வீழ்ந்த நெஞ்சை
பாடை வளர்த்தி தோழ் தூக்க
நால்வர் அருகில்
ஆயுள் முடிவின் நொடிப்பொழுது
எண்ணப்படுகிறது எனக்கு
இப்போதும் ஆசைத் துறவியல்ல நான்
முள் படுக்கை விரிப்பில் கிடந்தும்
மரணதேவனை
வா வா என்றே அழைக்கிறேன்
ஆசையுடன்.
02.
காதல் சிற்ப்பங்கள்
-------------------------------
நிலவே நிலவே கொஞ்சம் நில்லு
உன் காதலன் போல்
என் ஆதவனும்
அவனை கண்டால் சொல்லு
கண்ணே கண்ணுக்கு எய்யுமா அம்பு
கசிந்துருகும் இதையத்தை
கவர்ந்தீர்க்கும் காந்தம் அது
ஊடலும் கூடலும் காதலின் ஊத்து
ஒளி முகத் தேர்வும்
இருள் முக மறைவும்
மாதாந்த காதல் வகுப்பு
பந்தி விரித்தவள் இங்கிருக்கேன்
பரிசம் போட்டவன் எங்கோ அறியேன்
மாதங்களெல்லாம் சித்திரைக்குள்
காண்டாவன கதிரில்
கரைகின்ற நொடிக்குள்
மகரந்த கொத்துக்களின்
மத்தாப்புத் தூறலில் நனைந்தும்
நிற்ப்பந்தக் கூர் முனையில்
ஆகாத காதலென்று அலை மேவும்
நேசத் துறவிகளால்
இதையத்தை உளி அறுக்க
உயிரற்ற சிலையாய்
நிழலை தொடவும் முடியாமல்
காலம் செதுக்கிய சிற்ப்பங்களோடு
காதல் கோட்டையை அலங்கரிக்கிறேன்.
03.
விசச்சிலந்தி
----------------------
மெத்தை வலை விரித்து
செவ்வான ஒளி நின்று
விழி மெளசால் அழைக்கிறாள்
சிகப்பு விழக்கின் விசச் சிலந்தி
ஆறடி அழகுற்றவரின்
சிலுமிச சிருங்காரங்களில்
கைத்தொலை நகலாய்
இதழ் முத்த ஈரத்தில் நனைந்து
ஆட்டோக்கிராப் நாயகர்கள்
சீட்டுக்கட்டு ராஜாக்களாய்
இவளிடத்தில்
முந்தானை வைப்பகத்தில்
கூட்டுக் குடும்பம் நடத்தும்
பண நோட்டுக்களோடு
நாத்து மேட்டு நீர் தெளிப்பில்
உயிரணுக்கள் இவளுக்குள்ளே
உயிர் கொல்லி எய்ட்ச்சை பிரசவித்து
மரண வலை விரித்து
மெளனித்து காத்திருக்கிறது
விட்டில்களே வீழ்ந்து விடாதீர்
மெத்தை வலையில் விசச் சிலந்தி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-03-23