Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்

- சின்னு (சிவப்பிரகாசம்)

அயல் நாட்டு இளவேனில்.. கண்டதும் காதல்

01.
அயல் நாட்டு இளவேனில்..
------------------------------

வெண்பனி சூடிட பூமகள் வேண்டி
சுடர் கதிர் வேடுவன் உறங்கிடும் நாட்களில்
பூமகள் போர்த்த பெய்திடும் பொன்மழை
ஓவியன் வேண்டிடும் அலைகடல் ஓடத்தின்
சொப்பனப் புன்னகை

முதல்பனி கண்டதும் முகங்கொண்ட குறுநகை
முப்பனி காண்கையில் வெறுத்திடும் மனநிலை
வெண்பனி போக்கிட வந்திடும் கோமகன்
உறங்கும் மங்கையை உயிர்த்திட பெய்திடும்
பெருமழை தந்திடும் புன்னகை பொன்நகையா
நாடு விட்டு நாடுவந்தால்

புழுதி அடங்க கல்மாரி பொழிய
காளான் முளைக்க மின்னல் தெறிக்கும்
பொட்டல் காட்டின் வாசனை வேண்டி
அழியுதே என் மனது



02.
கண்டதும் காதல்
----------------------

இலை மீது இட்ட
இருசொட்டு நீரை
தழை முழுதும் பரப்பி
தாமரையாய் மலரும்
தாரகையே

கரை மீது மோதும்
அலை போல பார்வை
கண்டு மீள்வதும்
காண துடிப்பதும்
கண்டுமா சிரிக்கிறாய்

மலை மீது பிறந்து
மடுவை மணந்து
மகிழ்வோடு வாழும்
நிலவாய்
மாளிகையில் பிறந்து
மல்லிகையாய் மலர்ந்த
மரிக்கொழுந்தே எனை
மணப்பாயோ

சத்திரத்தில் சந்தித்து
சடுதியில் முடிவெடுத்து
காதலிக்க துவங்கிவிட்டேன்

உண்ண வந்தவளே
உலகம் அறிந்தவளே
கணினி மொழி கற்றவளே
மனதின் மொழி உணர்வையோ

தடுமாறும் உள்ளத்தில்
திசைமாறும் எண்ணமோ
மனதில் வரும் சொல்லையெல்லாம்
கவிதை என்றே சொல்கிறது

ஓவியம் வரைந்தாலும்
காவியம் எழுத
கவிதை புனைந்தாலும்
என் நாவில் சிதறும் சொற்களை
சேர்த்து வைத்தாலும்
அனைத்தும் சொல்லத் தலைப்படும்
உன் அழகை மட்டுமே

துள்ளும் மானும்
துவண்ட செடியும்
கோடை வெயிலும்
கொடும் பனியும்
பாவையர் கொஞ்சும்
செல்லக் கிளியும்
நிறைந்த குளமும்
வறண்ட நிலமும்
வாடைக்காற்றும்
உன்னில் காண்கிறேன்

உன்
மோகனப் புன்னகைக்கு, பேசும்
மொழிகளில் விளக்கம் இல்லை

நீ
மூன்று விரல் கொண்டு
முகம் குனிந்து உண்ணுகையில்
சிலிர்க்கும் சிந்தனைகள்
சிதைய மறுக்குதடி

காணும் முகத்தில் எல்லாம் கண்ணே
உன் கண்கள் தெரியுதடி

காரை தடத்தினிலும்
உன் கால்தடம் தெரியுதடி

வண்ண உடைகள் எல்லாம்
நீ உடுத்த வெளிர்க்குமடி

வாகனப் புகையும் கொஞ்சும்
பனிபோல தெரியுதடி

வண்ண தோகை கொண்டு
வண்ணமயில் ஆடி வந்தால்
உன் கண்கள் சுழற்றதே

வண்ண மயில் நாணி
தோகை உதிர்த்து விடும்

கொக்கு பறக்கையிலே
உன் விரல்கள் நீட்டாதே
மீன்கள் மீன்கள் என்று
விரல்கள் கொய்து விடும்

ஆடும் சபைகளுக்கு
அன்பே நீ போவதே .
நீ கொஞ்சம் அசைந்தாலே ,
ஆடும் நங்கையர்கள்
அடங்கி ஒடுங்கிடுவர் .
ஆடல் அரசி என்று
பட்டமும் தந்திடுவார்

ஆணாய் பிறந்து விட்ட
ஆணவம் அழியுதடி
உன் கடைக்கண் பார்வை தந்து
என் வாழ்வுக்கு அர்த்தம் கொடு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-05-15


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • காதலில் தோற்றவன்
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • ஆண்டவனுக்கு எச்சரிக்கை
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்
  • தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube