Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்

- சின்னு (சிவப்பிரகாசம்)

பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்

01.
பூக்கட்டும் புதிய புன்னகை
-------------------------------------

பூக்கட்டும் புதிய புன்னகை
பூ விலங்குகள் அழியட்டும்
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்
உணரட்டும் புதிய உலகினை

கதவுகள் இங்கெதற்கு
கயவர்கள் அழிந்தபின்னர்
கடமைகள் இங்கெதற்கு
உணர்வுகள் உணர்ந்த பின்னர்

இருட்டினில் கோப்பெதர்க்கு
இந்தியர் விழித்துவிட
பகட்டினில் வாழ்வெதற்கு
பட்டினிச் சாவிருக்க

பகற்பொழுது தேவையில்லை
பகலவன் உலா வர
வழித் துணை தேவையில்லை
மகேசன் பவனி வர
பூக்கட்டும் புதிய புன்னகை
பூவுலகு மீட்சி பெற
உதிக்கட்டும் புதிய விதிமுறை
அரசியலும் தூய்மை பெற

இருட்டினில் சட்ட இயற்றலோ
வெளிச்சம் கொண்டாருங்கள்
குறைகள் நிறைய இருக்கலாம்
வெளிச்சத்தில் செயல்படுங்கள்

பூக்கட்டும் புதிய புன்னகை
புவியாளும் மன்னர்கள் மத்தியில்
தேர்தலுக்கு வாக்களித்தால்
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்

மடியட்டும் பழைய விதிமுறை
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்

பூக்கட்டும் புதிய புன்னகை
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்
பட்டினிச் சாவிருக்க
பகட்டான வாழ்வெதற்கு
பகலவன் வந்தபின்னும்
இருட்டறையில் கோப்பெதர்க்கு



02.
ஏன் சினம்
-----------------

சினத்தினை அழிக்கவல்ல
சிறு துளி நஞ்சிருந்தால் -என்
சிந்தைக்கு அளித்திடுங்கள்
அகத்தினில் மகிழ்ந்திடுவேன்

ஏழ்மைக்கு வாழ்க்கைப்பட்ட
ஏழைக்குப் பிறந்திட்டதால்
கூழுக்குக் கவலைப்பட்டே
இளமை கழிந்ததுவே

சினமென்றும் கொண்டதில்லை
வயிற்றுப் பசியிருக்க
சிறுவயது கழிந்துவிட

கை கொண்டே உழைத்து நானும்
கனவுகள் வளர்த்துக்கொண்டேன்

மணம் கொண்ட மங்கை நல்லாள்
மகிழ்ந்திருக்க குழந்தைகள்
என்வாழ்வும் வளம் கொள்ள
சிறு பிழையும் சேர்ந்திடவே

சிறுகுழந்தை வயதுவந்து
வாழ்வும் தேடிடவே
சினம் எனைச் சேர்ந்திடுதே

அவன் வழி அவன் தேட
என் மனம்
ஏன் கொள்ளுது பெருஞ்சினம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-11-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • காதலில் தோற்றவன்
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • ஆண்டவனுக்கு எச்சரிக்கை
  • அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube