தேவதை
-----------------
மார்கழி பனியில்
மண்டப படியில்
மணிபுறாக்களோடு
மேற்கு நோக்கி
காத்திருக்கிறாள்
இவள்...
கிராமத்து தேவதை...
சில்லிடும் பனி
சிலிர்கவில்லை
உன் நினைவின்
சிலிர்ப்பு இவளுக்கு....
கிட்டது
குயிலோசை
தூரத்து ரயிலோசை
இவள் செவிகளுக்கு
மட்டும்....
மண்சாலையில்
செல்லும்
மாட்டு வண்டியின்
ஓட்டம்
நீ போட்ட
தாளம் இந்த
மங்கைக்கு....
சிற்றோடையில்
துள்ளிடும் மீன்கள்
அல்ல - அவை
சிற்றிடையாள்
சிந்திடும் உன்
சிந்தனைகள்....
பின்னி முடிந்த
கூந்தல் நுனியை
முறுக்கியிழுத்து
சிரிக்கிறாள்
சிங்காரி...
மீசைக்காரன்
ஞாபகத்தில்...
அணில் கடித்த
கொய்யாப்பழம்
தானுண்டு
பஞ்சவர்ண தாவணி
தென்றலில் படபடக்க
மனம் பகிர்ந்தவன்
வருகையை எண்ணி
தவிக்கிறாள்
பைங்கிளி....
நெற்றிப் பொட்டு
கரைய ....
பொழுது கரையாதோ
என் சலிக்கிறாள்
சந்தன மேனி
சிலையாள்....
வெள்ளைமனம்
கொண்டவள்
வைத்த கண்
வாங்காது
தரிசனத்துக்காய்
ஏங்குகிறாள்
குழந்தையாக....
அந்தி மல்லி
அவிழும் முன்
அன்பு சொல்ல
வருவானென
தவமிருக்கிறாள்
கிராமத்து தேவதை..
இல்லை இல்லை
இவள் உன்னுடைய தேவதை....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-12-12