Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

என்னை போல.. சிகரெட்டை.. பேர்ல மட்டும்

- சத்யா

என்னை போலவே திணருகிறதே..! சிகரெட்டை போலவே.. பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!


01.
என்னை போலவே திணருகிறதே..!
--------------------------------------

உன்னிடம்
கொடுத்துவிட்ட
நிழலை
இனி எப்படி பூமியில்
பிரதிபலிக்க செய்வது
என என்னை போலவே திணருகிறதே
என் மேல் வீசும்
ஒளிகள் எல்லாம்.....

02.
சிகரெட்டை போலவே..
---------------------------

என்னை பார்த்ததும்
நீ மறைக்கும்
சிகரெட்டை போலவே
நானும் மறைக்கிறேன்..
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன் மீதான ஆசையை.


03.
பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!
------------------------------------------------------
முண்டி அடிச்சு எனக்கும்
சேர்த்து சாப்பாட்டுக்கு
நிப்பியே பள்ளிக்கொடத்துல.....

ஜன்னலோரம் சீட்டு பிடிச்சு
எனக்கா விட்டு கொடுப்பியே
பஸ்சு ஏறயிலே..

என் மேல உரசிக்கிட்டு
ஊர் கத பேசுவியே
எறங்குற வரையில..

பருவம் திறந்து விட
பாவாடை மறச்சி என்னை
கொண்டாந்து சேத்தியே வீடு வரையில..

கல்யாணம் கட்டாம கடைசி வரைக்கும் இருப்போம்ன்னு கதை
அளந்துகிட்டோமே படிக்கையில..

சொல்லி தான் வாய் மூடல
வருசம் கூட ஒன்னு ஏறல..

கல்யாண சந்தையில கட்டி விட்டாக
நாங்க காணாத தூரமா பிரிச்சி வச்சாக..

பிரிகையில ஒரு தடவ பாத்துகிட்டோம்..

ஒன் பிள்ளைக்கு என் பேரும்
என் புள்ளைக்கு ஓன் பேரும்
வைக்கனும்னு சொல்லி வச்சுக்கிட்டோம்.. .

நெனச்சபடியே பேரு வச்சோம்..
அந்த பேர்ல மட்டும் thaana
நம்ம உறவ மிச்சம் வச்சோம்.. !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-04-28


தமிழ் யாளி

14 years 5 months ago

காலங்காலமாகrnசொல்லப்படும்rnஎதேச்சையான காதல்rnகதை எத்தனைமுறைrnபடித்தாலும்rnதன்னுடைய காதல்கதைrnயாக தோன்றும் கவிதைrnrnகவிதையின்rnவட்டார வழக்கு அழகு

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஒரு காரணத்தை.. இது தான் வாழ்க்கை..!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube