Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

துளிகளைத் திரட்டி துயரைதுடைப்போம்

- கண்ணப்பு நடராஜ்

துளிகளைத் திரட்டி துயரைதுடைப்போம்
------------------------------------------------------
வான் அமுதை ஏந்து
வளமான நதியாக்கு
வட்டமிடும் ஆறு
வளத்தின் வாயாகும்
புகழ் காலாகும்,

எம் பூமியை
நாம் ஏந்திய எம் நீரோடும்
பாலையிலே கால்வாய்
அது ஆகட்டும்,
அந்தப் பூமி
மடி நனைக்கும் நிலதுளை நீரோ
வெள்ளிக்காசைக் காட்டும்
வாய்க்கால்கள் ஆகும் ,

வரப்புயர நெல்லு உயரும்
சொல்லிய மூதாட்டி
எம்மவர் அறியாயோ..

வா வரப்புக்கள் செய்வோம்
நிலம் சூழ் வரப்புக்கள் செய்வோம்
வா எம் தமிழ் நிலப் பரப்பை
கடல் கொள்ளா வரப்புக்கள் கட்டுவோம்..

வான் துளி நீரெல்லாம்
தாழ்வாரச் சொட்டுக்களெல்லாம்
மேட்டில் கொட்டும்
காட்டு மழையினை
கும்பிடு கையைக் குவித்து
வானை நோக்கி ஏந்தி
அதில் வற்றாத
நதி செய்வோம் வா,

வான் சிறப்புச் சொன்ன
வள்ளுவன் நல்ல தமிழன்..,
வா வரப்புக்கள் கட்டி
செல்வம் சேர்ப்போம்..

நம் தாயும்
இனி வரும் தமிழ் குழந்தைகளும்
தமிழ் நாடும்
அயல் குழந்தைகளும்
வான் முலையில் வற்றாமல் குடிக்க ..,

கொள்ளை நீர்
கடலில் கலந்தாலும் க
டனாய் அளவாய்க்
கண்ணீர் கலவாய்
எவன் தருவான் நீரை

வேண்டாம் பிச்சைப் பாத்திரம்
எம் நிலம்
நீரை வடித்து வைக்கும்
பெரும் பாத்திரம் இருக்கையில் ..

அதோ
சூழ் அந்தக் பெரும்பரப்புக் கடலின் ஆவியையும்
திரட்டிகுளிராக்கு, அ
தை எம் நிலம் நோக்கித் திருப்பிப் பயிராக்கு..

தமிழா நீ தலை நிமிர்த்து
வெள்ளம் வந்தால்
பெருக்கென்று சொல்லு
அது செல்வப் பெருக்கென்று சொல்லு..

நிலமெங்கும் ஓட்டை செய்
கங்கையை எம் மண் காவட்டும்
அந்தப் புனித நீரை நிறைத்திடு
நிலக்கீழ் நீரென்ற
புதையலை நம் வாரிசுகள் எடுக்க..

இனி இல்லை
இல்லாப் பயிர் செய்ய வா,

நீர் உண்டு
நில மடியில் வற்றா ஆறுண்டு..

மேடாக்கி அணை செய்து
கடலைக் கோளைக் கட்டுப்படுத்து,
தோண்டிக் கண்ட பள்ளத்தில் ஆற்றை ஆக்கு,

ஓடி வரும் நீரமுதை
குளமெல்லாம் தேக்கும்,
குலமெல்லாம் ஒன்றாகும்,
ஆறெல்லாம் நீர் சுமந்து குளம் குட்டை நிரப்பும்,

வான் ஓட்டை போடும்
விண்கோள் ஏவி விளையாடியது போதும்,
மண்துளைத்து
மழை நீர் செல்ல வழி சொல்லு போதும்,

கையுண்டு
கன மனிதர் தான் உண்டு,
நீர் துளை நீ போடு..
காற்று நீரைக் கைப்பற்ற
காட்டு வேலி எல்லையெங்கும் போடு..

உணவு உண்டு
நீரமுது உண்டு எம் கையில்,

கோடையிலே மண் அகழ வா
பெரும் வாய்க்கால் செய்வோம் வா..
ஒரு நாளை ஒதுக்கி
ஒரு கடகம் மண் எடுத்தால்
மாரி மழை வற்றாத நீரூற்றை மண் மடி சுரக்க வைக்கும்,

வா மலட்டு மண்ணை
வேர் பற்றி செழிக்கசெய்வோம்..

கரை தாண்டி
கடல் கலக்கும் நீரை
நிலத்துள்ளே சிறைபடுத்தி
வெள்ளப் பெருக்கை
செல்வப் பெருக்காய் செய்வோம்..

எம் நாட்டு செல்வம்
கடலில் கரைவதோ
மாரியிலே வெள்ளமென்று புலம்புவதோ

கடலோரம்
பெரும் மேடை அணை செய்வோம்
பெரும் ஊழி அலைக்கை உடைப்போம்
அதிலே பாதையும்
பெரும் சாலை சூழ் சோலையும் சமைப்போம் ..

ஓடக் கூடுமா வெள்ளம்
நம் நிலச்சாற்றைக் கரைத்து
மாரியிலே வெள்ளம்
கடித்துப் பயிர் செத்த கதை சொல்லி
கோடையிலே நீர் மறுத்து
பயிரழிந்த புராணம் பாடி...

நாட வேண்டுமோ
அவன் நீரைக் கேட்டு..

அயல் அவர்
எம் தமிழர் பூமிக்கு
கையேந்தி வரட்டும்
அந்த அயல் நாட்டுப் பறவைகள்
பசியாறப் பருவப் பெயர்ச்சியில்
பஞ்சத்தில் படை எடுத்தால்
அள்ளிக் கொடுப்போம்
அணைத்து நீரும் வாழ
வேரோட நிலமும் கொடுப்போம்,

முல்லைக்கு
தான் ஓடும் தேர் கொடுத்தான் தமிழன்
வாழும் மனிதருக்கு
வறளும் பயிருக்கு
நீரினை மறுப்பானோ..

மற்றவன் அழக் கண்டால்
பெரும் மனதில்
நீர் அள்ள மறுப்பானோ....

வள்ளல் வராலாறு வைத்து
வாழ்வு கொடுப்பவன் தமிழன்,
நீ எடு ஒன்றாய்
மண்ணை நீரேந்தி
வெள்ளம் திசை திருப்பும்
வளம் திருத்தும்
ஏர் ஆயுதம்,

வா ஒன்றாய் மாரி வர முன்னாய் ..
மண் வாரி கடல் கொள்ள முன்னர்,
பெரும் பணி இதுவே
நம் மண்ணை
நாம் காக்கும் நற்பணி
ஒன்றாய் இணைவோம்
கங்கையை மதி கொண்டு
நம் கையால் கடைவோம்
துளிகளைத் திரட்டி துயரை துடைப்போம்..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-07-03


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி
  • ஓரம் போ..
  • கேள்வி
  • காட்சியாய் சாட்சியாய்...

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube