Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அச்சம் எனும் பேய்.. பரதேசி.. கனவு

- சின்னு (சிவப்பிரகாசம்)

அச்சம் எனும் பேய்.. பரதேசி.. கனவு

01.
அச்சம் எனும் பேய்
---------------------------

சடச் சட மழையில்
ஈரக் காற்றில்
இருள் அணைத்த வேளையில்
மீண்டும் மீண்டும் வருகிறாள்

வாகனப் புகையில்
கரும் பூனையில்
காவல் நாயில்
சிறு வழியில்
சீறும் மனிதரில்
என்னிடம் வருகிறாள்

உயர்ந்த மரங்களில்
விளைந்த நிலத்தில்
மக்கள் கூடும் இடங்களில்
வெட்ட வெளிகளில்
என்னிடம் தஞ்சம் என்றே வருகிறாள்

எரியும் அடுப்பில்
சுடும் எண்ணையில்
வெட்டும் கத்தியில்
எல்லாம் ஆகத் தெரிகிறாள்

அறிஞர் கூடும் இடங்களில்
அறிவுப் போர்களில்
காக்கிச் சட்டைகளில்
வேகம் போகும் வாகனங்களில்
கவர்ந்தே என்னைச் செல்கிறாள்


02.
பரதேசி
--------------

தீயைத் தீண்டிவிட்டேன்
தீப்புண்ணும் பெற்று விட்டேன்
தனிமை என்னும் பெரும் பேயை
தாரமாகப் கொண்டு விட்டேன்

பிழைப்பைத் தேடும் பிணையக் கைதியாய்
வாழ்வு முழுதும் ஓடிடும் ஆறாய்

திக்கற்ற வாழ்வில் நானும்
திசை மாறிய மானாய்

விசைத்தறி வந்தபின்
கைத்தறி கொண்ட
மனிதனின் மனமாய்

அலைபாயும் மனதுடன்

பிறதேசம் வாழும்
பரதேசி எனக்கு

என் வீட்டு விழாக்கள்
என்றும் எனதில்லையே


03.
கனவு
-------------

தேடல் துவங்கிய நாளில்
தேவதை தோன்றினாள்
இலக்குகள் அற்ற வாழ்வின்
முகவுரை எழுதினாள்

அணிகள் சேர்ந்த அங்கம்
அகவுரை எழுதத் தோன்றும்
இருமதி கொண்ட மதிக்கும்
இனிமை கொடுத்திடும்

அயலவள் எனச் சொன்னேன்
அனுமதி கோரினாள்
தந்தேன் எனச் சொன்னேன்
ஒருமையில் பேசினாள்

தனியறை எங்கு என்றேன்
தகவலோ எனக் கேட்டாள்
தனிமையில் என்று சொன்னேன்
தறுதலை என்றனள்

விண்ணில் என்றே சொன்னேன்
மீன்களா என்றாள்
உன் கண்கள் எனச் சொன்னேன்
முத்தங்கள் தந்தாள்

விதிமுறை என்ன என்றேன்
விதிகள் இல்லை என்றாள்
அங்கம் வயல்வெளி என்றதும்
வரைமுறை என்றனள்

தேர்தான் என்று சொன்னேன்
ஊர்வலம் எனச் சொன்னாள்
மொழிபவள் என்றதும்
இமைகள் மூடினாள்

பொதிகை எனச் சொல்ல
தென்றல் என்றனள்
உன் குழல் தான் எனக் கேட்டு
இசைபோல் பேசினாள்

கனிகள் எனச் சொன்னேன்
தோப்பில் என்றனள்
அழகினில் எனக் கேட்டு
அடித்தே ஓடினள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • காதலில் தோற்றவன்
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • ஆண்டவனுக்கு எச்சரிக்கை
  • அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube