கருவறை உறவு
-----------------------
காற்றின் ஈரம் மீட்டெடுக்கிறது
நினைவின் சுகந்தங்களை.
ஒன்றை இழந்தால் தான்
ஒன்றைப் பெற முடியுமா?
தாயின் கதகதப்பான ஸ்பரிசம்
கண்ணீரை வரவழைக்கிறது.
உன் மடியில் தலை சாய்க்கும்
மறுவாய்ப்புக் கிட்டாமலே
போய் விடுமோ என
மனம் பதைபதைக்கிறது.
என் நெஞ்சத் துடிப்பின் அதிர்வு
உனக்குத் தெரிந்திருக்கும்.
நம் மனங்களிடையே
அழுத்தமாய் இருக்கும் இந்தச் சுவரை
யார் தகர்ப்பது?
தொலைவுகளைக் கடந்தும்
எல்லைகள் தாண்டியும்
எனக்குள் நீயும்
உனக்குள் நானுமாய்
காலம் மறந்து உறைந்திருக்கிறோம்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2016-03-25