மனிதனைத் தேடி

-- சத்தி சக்திதாசன்

களைத்து விட்டேன் ஏனொ இது
முடிவிலாத பயணமன்றோ !

பாதை நீண்டு
கொண்டேயிருக்கிறது
பயணம் தொடர்ந்து
கொண்டேயிருக்கிறது
தேடும் அவனைக்
காணவவேயில்லை !

அன்பைக்கொடு உடனே
அவனைக் கண்டுபிடித்து விடலாம்
என்றவன் ஒருவன்
கொடுத்த அன்பையும்
தொலைத்து விட்டு
ஏழையாய் இன்று நான்
ஆனாலும்
அவனைக் காணவில்லை

பணத்தை அள்ளியெறி
காலடியில் விழுந்திருப்பான்
அறிவாளி ஒருவன்
அறிவுரை சொல்லிட்டான்
இருந்ததை இழந்தோர்
செல்வந்தனானேன்
இன்னமும் அவனெனக்கு
அகப்படவில்லை

வெளிச்சத்தில் பார்த்தால்
வெளியே வந்திடுவான்
இருட்டினில் இருந்தவன்
இனாமாய் வழங்கிய புத்திமதி.
பகல் போல வெளிச்சத்தை
பாய்ச்சியும் கூட
கண்களின் ஓரத்தில்
காணவேயில்லை அவனை

களைத்து விட்டேன்
கடைசிப் படியை எட்டியும் விட்டேன்

தென்படவே மாட்டான் எனத்
தெளிந்து நானும்
உலகில் அவன் இல்லவேயில்லை என
உணர்ந்து கொண்டே தூங்கும் போது
தோளில் ஒரு கை
தோழமையாய்த்
தொட்டது

தேடும் போது என்னைக்
காணமாட்டாய் என்னை
ஏனெனில்
நீ தேடியது
எந்தன் நிழலையே
சிரித்தபடியே என்னருகே
மனிதன் நின்றான்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-03 00:00
Share with others