நிசப்தம்
கவிஆக்கம்: பாண்டித்துரை
ம் என்ற
முனகலுடன்
அப்பா என
கொட்டாவி விட்டு
டிக் டிக் டிக் டிக்
கடிகார பெண்டுலகம்
உளறல் பேச்சுக்களாய்
உறங்கும் உருவங்கள்
குறட்டைச் சத்தமாய்
தலையை சொரிந்து கொண்டு
பூனைகளின்
நடமாட்டத்துடன்
இரவுகளின் நிசப்தம்
மூடிய இமைகளுக்குள்
விழித்தபின் பேசும்
கனவுகளாய்!
கவிஆக்கம்: பாண்டித்துரை
தொடர்புக்கு:006597345497
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-22