பாதுகாத்திடுவோம்
உறைந்த பனிகட்டிகள்
உருகிக் கொண்டிருக்கின்றன
பாய்ந்துஓடும் ஆறுகள்
வறண்டு கொண்டிருக்கின்றன
உலகின் உயர்வெப்பநிலையை அறிய
வேண்டும் - ஓர் புதியகருவி
வளிமண்டல வடிகட்டி
ஓசோனை ஓட்டையாக்கினோம்
என்ன தந்தோம்
நம் சந்ததியினருக்கு
முடியுமோ இன்னுமொரு செயற்கை பூமி
பாதுகாத்திடுவோம் இயற்கை பூமியை
- லலிதாசுந்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04