தத்தித் தித்தித்
தங்கநிலவே - நீ
தாவணிப் பூவுக்குள் பூவானாய்!
முத்துத் தெறித்திடும்
மெய்யழகே - நீ
முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் !
பெத்த மனங்களின்
பொந்துகளில் - நீ
பிறந்ததும் மீட்டிய குரலிருக்கு !
எத்தனை வளர்ந்து
நிமிர்ந்தாலும் - உனை
எடுத்தே கொஞ்சிடும் உயிரெனக்கு !
பத்துத் திங்கள்
சுமந்தவளும் - உன்
பருவம் கண்டே வியக்கின்றாள்!
ரத்த ழையின்
சின்னவனும் - நீ
ரத்தினத் தீவெனக் கூவுகின்றான் !
நித்தம் ஒளிரும்
நெற்றிமொட்டே - என்
நெஞ்சலே¢ வளரும் தாலாட்டே!
புத்தம் புதிய
மழைத்துளியே - நீ
பேசிடும் மொழியும் தேனிசையே!
முத்தக் காட்டில்
விட்டுவைத்தேன் - நீ
மூர்ச்சையாகிப் போகவில்லை !
கட்டித் தழுவி
நொறுக்கிவைத்தேன் - உன்
கண்களில் தாகம் தீரவில்லை !
எத்தனைப் பாசம்
பொன்னழகே - நீ
ஏணிக்கு எட்டாத வெண்ணிலவே!
பொத்திய கைக்குள்
வைரமென்றே - உனைப்
பெற்ற நிறைவுக்கு ஈடுமில்லை!
- புகாரி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01