Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தீயெனத் தனிமை சுட ...!

- எம்.ரிஷான் ஷெரீப்

தீயெனத் தனிமை சுட ...!


எந்தவொரு மேகக்கூட்டமும்
எனக்கென்று நிற்காதவொரு
பெரும்பரப்பில் நான்;
பேசக்கேட்க யாருமற்றுத்
தனித்திருக்கிறேன் !

இப்பொழுதுக்குச் சற்றுப்பின்
வலி மிகும் தொனியுடனான
எனது பாடல்
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி
உடற்புழுதியப்பும்
இப்பாலைவனம் பூராவும்
எதிரொலிக்கக் கேட்கலாம் !

எனைச் சூழ ஒலித்தோயும்
எந்தவொரு அழைப்பும்
எனக்கானதாக இருப்பதில்லை ;
எனைச் சிதைத்து ஆளும்
இப் பெருவலியையும்
எவரும் உணர்வதில்லை !

இப்படியே போனாலோர் நாளென்
முதல்மொழியும் மறந்துவிடுமென
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்
விழும் துளியொவ்வொன்றுமென்
செவிக்குள் ரகசியம் பேசித்
தசை தடவிக் கீழிறங்கி,
மணலுறிஞ்சி மறைந்து போக
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?

எனைச் சூழ்ந்திருக்கும்
தனிமையையும் , மௌனத்தையும்
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ?


- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-16


Haranprasanna

18 years 11 months ago

நல்ல கவிதை, குறிப்பாக பெரும் சாத்தான் விழுங்கிச்சாக என்கிற பிரயோகம். நன்றி.

K.Chidambaram

18 years 6 months ago

அன்புள்ள ரிஷான் அவர்களுக்கு,
சொர்கத்திலிருந்தாலும் தனிமை நரகம்தான் தனிமை காலத்தைக் கொல்லும் பெரும்சாத்தான் உணர்வுகளை உசுப்பும் பெரும்பேய் கனவுகளைகத் திண்ணும் மோகிணி; உங்கள் கவிதையின் உண்மை நான். கு.சிதம்பரம்,சீனா

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஒரு வண்ணத்துப் பூச்சியின் பாடல்
  • தலைநகரத் துயரக்குறிப்பு
  • இதயங்கள் தேவை !
  • பேய் மழை ...!
  • பத்து விழிகள் !
  • ஒரு கணப் பொழுதில்...!
  • சுனாமியழித்த சினேகிதனுக்கு...!
  • நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !
  • தடங்களழியும் பொழுதிலுன் நேசம் ...!
  • மனவெடிப்பிலுன் தடம்பதித்து...!
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube