ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
விளையாடச்சொன்னது
இன்னும் பல உணர்வுளால்
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால்
இம்முறை மௌனமே என்
முதல் வா£த்தையாகியது
என் ஆன்மாவின் உணர்வுகள்
என் விருப்பத்தை உனக்கு
வெளிப்படுத்தும்வரை உன்
கள்ளமற்ற உள்ளம் மட்டும்
என் கண்களுக்குத் தெரியட்டும்
மௌனமே என் மொழியாக இருக்கட்டும்
என் உணர்வின் அலைகள் உன்னை
நெருங்குவதற்குள் நீ என்னிடமிருந்து
விலகிவிட்டால் என் விருப்பு மௌனமாய்
என்னுள்ளே சாகட்டும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

சிறந்த வரிகள்rnஉயிர் கில்லும் வரிகள் தந்த rnகத்துக்குட்டிக்கு வாழ்த்துக்கள்rn