Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஒரு கடல் நீரூற்றி

- பஹீமா ஜஹான்

ஒரு கடல் நீரூற்றி

நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !

பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

- பஹீமா ஜஹான்
2002

ஒரு கடல் நீரூற்றி...தொகுப்பிலிருந்து
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-06


எதிக்கா

18 years 10 months ago

வார்ப்பின் தளத்தில் கவிஞர் பஹீமா ஜஹான் எழுதிய " ஒரு கடல் நீரூற்றி" என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு கவிதை. இதுவரையும் வினாவுக்கே விடைதெரியாத இறப்பின் தேதியை தற்கொலைப் போராளிகளால் மட்டும் தான் குறிக்கமுடியும் - எவ்வளவு நெஞ்சளுத்தமான செயல் இது. இதுவே எனக்குள் பெரிய ஒரு தளம்பலை உண்டுபண்ணியிருந்தது. ஏனெனில் இறப்பு என்பது பொதுவாக எல்லோராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாக இருந்து வந்ததால். இறப்பை எதிர்நோக்குவதும் அல்லது எமக்குப் பிரியமாணவர்களின் இறப்பில் இருந்தும் மீளுவது என்பதும் மிகவும் வேதனை தோய்ந்த ஒரு வலி. அந்த வலியை உணர்வது என்பது அவ்வளவில் எளிதாகிவிட முடியாது. இருந்தபோதிலும் இக் கவிஞரின் கவிதையினூடே அதை உணர முடிகிறது.

தியாகங்களில் அதிசிறந்தது "உயிர் தியாகம்" இப்படியான உயிர்தியாகங்களைச் செய்யும் தியாகிகளை நாம் அன்றாடம் இப்போராட்ட சூழலில் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். கூடுதலான போராளிகளின் வெற்றுடலை சமாதிகள் ஆக்கி அவர்கள் அங்கே மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் சமாதிகளுக்கு மக்கள் தம் அஞ்சலிகளை காணிக்கையாக்கி வருவது சாத்தியமே. ஆனால் இக்கவிதையில் குறிப்பிட்டிருக்கும் "ஏதுமற்ற உன் கல்லறை" என்னைப் மிகவும் பாதித்துவிட்ட ஒரு வசனம்.

வெற்றிடமான ஒரு போராளியின் கல்லறை என்பது அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு விடயம் இல்லை.

அப்படியான ஒரு "ஏதுமற்ற உன் கல்லறையில் ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?" என்று இக் கவிஞர் இழப்பின் வலியுடன் கோருவது என் தொண்டைக் குழியையே அடைத்துவிட்டுச் சென்றுள்ளது.

--எதிக்கா (07.01.2008)

jahan.faheema

18 years 10 months ago

உங்கள் கருத்துக்கு நன்றி.

பாடலாசிரியர் அஸ்மின்

18 years 10 months ago

அன்புக் கவிஞருக்கு ஆழிய வந்தனங்கள் கவிதை அருமை.பாராட்டுக்கள் 0094 072 4679690

deebachelvan

18 years 10 months ago

பஹீமா ஜஹான் இந்தக் கவிதையையை எனக்கும் மிக பிடித்திருந்தது. எனது தளத்தில் போட்டிருக்கிறேன். போராளிகளின் தியாகம் அதிலும் தற்கொலைப்போராளிகளின் தியாகம் எனது நகரத்தில் இந்த கோடுகளை தினமும் நான் காண்கிறேன் பஹீமா ஜஹான் ..

jahan.faheema

18 years 9 months ago

நன்றி ஈழநிலா மற்றும் தீபச்செல்வன் ஆகியோருக்கு. தீபச்செல்வன்,உங்களின் பின்னூட்டத்தில் பார்த்து இன்று தான் உங்கள் வலைப் பக்கம் போனேன். எனது வலைப்பக்கத்தின் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

ரம்சின் நிஸாம்

15 years 6 months ago

பஹீமா ஜஹானின் வரிகள் என்றைக்கும் போலவே rnஇன்றும் சில அமைதியின்மைகளை தோற்றுவித்துள்ளது. சிறந்த கவிதை

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • விடைபெறல்
  • தீவில் தனித்த மரம்.. ஆதித்துயர்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube