தாமரைக்குளத்தில் இறந்த மனிதனும் பூத்த தாமரைகளும்
தாமப்பா குளிக்கப்போனபோதும்
தாமரைக்குளம்
பூத்திருந்தது
மருத மரநிழலில்
தண்ணீரும் படு குளிராக இருந்தது
பகல் முழுதும்
தாங்கொணாச் சூரியன்
நெருப்பையவிழ்த்தபோதும்
தாமரைக்குளத்தில்
தண்ணீர் குளிராகத்தானிருந்தது.
தாமப்பாவுக்கும்
தாமரைக்குளத்துக்கும்
கோடி சம்மந்தம்
எந்த ரகசியங்களையும்
தாமரைக்குளத்திடம்
மறைத்ததில்லை
அவர்
முப்பது வருசமாய்
காலைக்குளியல்
மாலை நீராடல்
கண்ணன் கோயில் தீர்த்தத்தில்
கரையெல்லாம் தாமரைகள்
பூக்களும் மொட்டுகளுமாய்
தாமப்பாவோடு
ஒரு பின்னேரம்
தாமப்பா மட்டும்
தாமரைக்குளத்தில்
குளம் அவரைக் கொன்று விட்டதா
தாமப்பா குளத்தில் மூழ்கி இறந்தாரா
- கருணாகரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-30
சொற்களாலும் உணர்வாலும் மீறி வருணிக்கிற பாங்கு உங்களிடமுண்டு...
சிலவேளை புதுமைபித்தனையும் ஞபகப்படுத்துகிறது..
யதார்த்தமான உருவங்களை அது மேலும்
தீவிரப்படுத்தி சொல்லுகிறது..
அதனால் போர் மற்றும் அரசியல் கவிதைகள் பெரிய அளவில் தாக்கத்தை தருகிறது..
நீங்கள் எழுதும் சில கற்பனைத்தன்மையுடைய கவிதைகள்
மீறி சொல்லுகிற முறை ஒரு கற்பனை உலகத்தைத்தான் கட்டிதருகிறது..
வாழ்வியல் கவிதைகள் பெரிய வாழ்வனுபவத்துடன்
நல்ல படிமங்களாக வருகிறது...
தாமரைக்குளம்...நல்ல கவிதை.
தீபச்செல்வன்.